________________
58 துணைப்பாடம் உயரம்வரை மேல் நோக்கி எழுந்து சிதறுகின்றது. இக்காட்சியை பல கல் தொலைவிலிருந்து பார்க்க லாம். சினங்கொண்ட அரியேறு பெரு முழக்கமிடுதல் போல, அருவி நீர் பாறையில் மோதுற்றுச் சிதறி மேல் எழும்போது உண்டாகும் பேரொலியைப் பல கல் தொலைவிலிருந்து கேட்கலாம். அருவி நீரின் இவ்விரு நிலைகளையும் நன்கு கவனித்த ஆப்பிரிக்கப் பழங்குடிகள், இவ்வருவிக்கு 'முழக்கமிடுகின்ற புகைப் படலம்' என்று கவி நயம்படப் பெயரிட்டுள்ளனர். தமது விக்டோரியா அருவியைப் பற்றிய அநுபவத்தை லிவிங்ஸ்டன் கூறியுள்ளது படித்து இன்புறத்தக்கது; "நான் இந்தச் செழுமை நிறைந்த நிலப்பகுதியிலுள்ள சாம்பசி ஆற்றின் கரையோர மாகவே சென்றேன். குறிப்பிட்ட ஓரிடத்தில், நீல வானில் வெண்புகைப் படலம் போன்றும், பனி நீர்ப் படலம் பறப்பது போன்றும் அரியதொரு காட்சி புலப் பட்டது. கதிரவனின் பொற்கதிர்கள் அப்படலங்களை ஊடுருவிச் செல்லும்போது, இயற்கையாகவும் செயற்கையாகவும் உள்ள பல நிறங்கள் தோன்றித் தோன்றி மறைந்தன. ஒரு சமயம் பளிச்சென்று செந்நிறம் தோன்றியது. உடனே அது மாறுபட்டுப் பொன்னிறமாயது. யான் வியப்புடன் அதனை நோக்கினேன். கண் இமைக்கும் நேரத்திற்குள் அந்நிறமும் மாறிப் பசுமைக் காட்சியை நல்கியது. அதுகாறும் வரண்ட பாலைநிலத்தையும், இருள் கவிந்த காடுகளையுமே கண்டுவந்த எனக்கு, அத் தோற்றம் பெருவியப்பையும் உள்ளக் கிளர்ச்சியையும் ஒருங்கே அளித்தது.