________________
68 தன் நிலைமாறாமல் துணைப் பாடம் பெருக்கெடுத்து ஓடி வளங் கொழித்து வந்தது. இவ்வுண்மையை, "கோள் நிலை திரிந்து கோடை நீடினும் தான் நிலை திரியாத் தண்டமிழ்ப் பாவை" என்ற சீத்தலைச் சாத்தனார் புகழ் மொழியிலிருந்து நன்கு அறியலாம். "நீர் உயர நெல் உயரும்; நெல்உயரக் குடிஉயரும்; குடிஉயரக் கோன் உயர்வான்” என்ற மொழிப்படி நீர் வளந்தான் மக்கள் வாழ்வை உயர்த்தத் தக்கது. மக்கள் வாழ்வு உயர உயர, நாகரிகம் படிப்படியாக வளரும். நாகரிகம் நன்முறை யில் வளர்ச்சி பெறின், பண்பாடு வளரும். இங்ஙனம் பண்பாட்டை வளர்க்கும் பெருமைபெற்றது நீர்வளம். தமிழ் நாட்டின் இருதயமாக விளங்கும் சோழநாட்டைச் சோற்று வள நாடாக ஆக்கிய பெரு மை யை உணர்ந்தே, சீத்தலைச் சாத்தனார் காவிரித்தாயை, "தண்டமிழ்ப் பாவை" என்று வாயாரப் பாராட்டிக் கூறினர். 66 பண்டைக் காலத்தில் இக்காலத்தில் காவிரியாறு தமிழ் நாட்டு எல்லைக் குள் வருவதற்கு முன்பு அதன்-நீர் பல இடங்களில் தேக்கப்படுகின்றது. அதனால் இக்காலத்தில் ஓராண் டில் பலமாத காலம் காவிரி வரண்ட தோற்றத்தைக் கொடுக்கின்றது. ஆயின், பண்டைக் காலத்தில் இவ் கோடைக் காலத்திலும் வற்றாத பெருக்குடை யாறு