உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருவிகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

$80 துணைப் பாடம் யாகப் பாய்ந்து விரிவடைகின்றது. இவ்விடத்திற்கு அண்மையில் ஷிம்ஷா, அர்க்காவதி என்னும் இரண்டு ஆறுகள் காவிரியில் கலக்கின்றன. இவற்றால் நீர்ப் பெருக்கமெடுத்த காவிரி, அகன்ற இடத்தில் பாய வழியின்றி, மலைச்சரிவுகளுக்கு இடையே ஏறத்தாழப் பன்னிரண்டு அடி அகலத்தில் பாய்கின்றது. இக் குறுகிய இடத்தில் ஒரு கரையிலிருந்து எதிர்க்கரைக்கு ஓர் ஆடு தாண்டிவிடலாம். ஆதலின் இவ்விடத்திற்கு மேக தாடு (ஆடு தாண்டும் காவிரி) என் று பெயர் ஏற் பட்டது. மைசூர் எல்லையைத் தாண்டிச் சேலம், கோயம்புத்தூர் எல்லைகளை அடையும்போதுதான் காவிரியாறு பரவிப் பாய வசதி ஏற்படுகின்றது. கொங்கு நாட்டில் மைசூர் நாட்டிற்கு வெளியே பாயும் காவிரி சேலம், கோயம்புத்தூர், மாவட்டங்களுக்கு எல்லையாக வளைந்து வளைந்து பாய்கின்றது. அந்நிலையில் பல ஆறுகள் காவிரியில் கலக்கின்றன. காவிரியாறு வழியில் ஹொகெனகல் அருவியாக மாறி, மீண்டும் ஆறாகப் பாய்கின்றது. பின்பு அதன் போக்கில் சின்னாறு, தோப்பூர் ஆறு என்னும் துணையாறுகள் கலக்கின்றன. சேலம் மாவட்டத்தில் சீதாமலை, பால மலை என் னு ம் இரண்டு மலைத்தொடர்களுக்கு இடையே காவிரி பாய்கின்றது. இவ்விடத்திற்றான் மேட்டூர் அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணைக்கு அப்பால் இவ்யாறு மலைநாட்டிலிருந்து சமவெளிப் பகுதியில் பாயத் தொடங்குகின்றது. அங்ஙனம் பாயும் பொழுது பவானி, நொய்யல், திருமணிமுத்தாறு முதலிய துணையாறுகள் காவிரியில் கலக்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருவிகள்.pdf/82&oldid=1693043" இலிருந்து மீள்விக்கப்பட்டது