உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருவிகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

குற்றால அருவி 95 செடிகளும் தம் பழ வகையாலும், காய் வகையாலும் மலைப் பகுதியை மணம் பொருந்திய பகுதியாக மாற்று கின்றன. மல்லிகை, முல்லை,மகிழ், செண்பகம், பாதிரி, வெட்சி முதலிய மலர்கள் மலர்ந்து நாற்புறமும் நறு மணத்தை வீசி மலைவளம் காண வருபவரை மகிழ்விக் கின்றன. மரக்கிளைகளிலிருந்து தொங்கும் பச்சிளங் கொடிகளும் மலர்க்கொடிகளும் விழிகட்கு விருந்தூட்டு கின்றன. மலையின் சமதளத்தில் பலவகைச் செடி களும், சஞ்சீவி முதலிய மூலிகைகளும் பரந்து கிடக் கின்றன. இயற்கை எழில் நிறைந்த இம்மலைப்பகுதி களில் கரி, நரி, புலி, மான், மலையாடு, முள்ளம்பன்றி முதலிய காட்டு விலங்குகள் கவலையின்றித் திரிகின் றன; பல்வகைப் பறவையினங்கள் மலைக்காடுகளில் இசை பாடிய வண்ணம் இருத்தலைக் காணலாம். மழைப் பருவத்தில் மலைகளையும் மரங்களையும் ஊடுரு வித் தண்ணீர் அருவிகளாய்க் குதித்து விளையாடிக் கால்களாகவும் ஆறுகளாகவும் பாய்கின்றன. இம் மாரிக்காலத்தில் மலையின் தோற்றம் கண் கவரத்தக் கது. மெல்லிய பஞ்சு போன்ற வெண்முகில்கள் பற் பல உருவங்களில் மலை முகட்டில் தவழ்ந்தும், விண் ணிற் பறந்தும் விளையாடுவதைக் காணலாம். வெண் முகிலும் கரு முகிலும் முழவு கொட்டத் தம் அழகிய தோகைகளை விரித்து மயிலினங்கள் மழையை வர வேற்று ஆடுகின்றன. மந்திகள் குட்டிகளை வயிற்றிற் சுமந்துகொண்டு மரங்களிலுள்ள கனிகளைச் சூறை” யாடித் தின்று எறிகின்றன. இத்தகைய காட்சிக் கிடையில் பொதிகை மலைப் பகுதியில் தோன்றும் 'தென்றல்' என்னும் இளங்காற்றுத் தவழ்ந்து விளை யாடுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருவிகள்.pdf/98&oldid=1693059" இலிருந்து மீள்விக்கப்பட்டது