பக்கம்:அரை மனிதன்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா. சீனிவாசன்

123


 இருந்தான். அவனைப்பற்றி இதற்கு முன்னால் உங்களுக்குச் சொல்ல வாய்ப்பில்லை சந்தர்ப்பம் வரும் பொழுதுதானே நாம் வக்கீலிடம் போக வேண்டியிருக்கிறது. அம்மாவிற்கு எப்படியும் என்னை உள்ளே வைக்கக்கூடாது என்பதுதான்.

அவளைப் பொருத்தவரை ரங்கன் தான் திருடன். அவன் தான் எடுத்துக் கொடுத்து இருக்கிறான். ரங்கனைக் காட்டிக் கொடுக்கக்கூடாது என்று அம்மாவிடம் சொல்லியிருந்தேன். அவன் உள்ளே போய்விட்டால் அம்மாகண்னு ஒரு பிரச்சனையாவாள் என்பதை எடுத்துக் கூறி இருந்தேன். அம்மா கண்ணு இந்தக் குடும்பத்தைக் காப்பாற்றி இருக்கிறாள். அதே நன்றி உணர்வு அம்மாவுக்கு மிகுதியாக இருந்தது. ரங்கனைக் காட்டிக் கொடுக்க அம்மா விரும்பவில்லை. அதனால்தான் அவள் நேரே கண்ணபெருமானிடம் சென்றாள்.

என் தங்கையும் அவனோடு வந்திருந்தாள். அப்பொழுதுதான் என் தங்கையின் அருமை எனக்குத் தெரிந்தது. உடன் பிறந்த சகோதரனைவிட தங்கை எவ்வளவு பாசமும் அன்பும் கொண்டு விளங்குகிறாள் என்பதை உணரமுடிந்தது. அவள் கண் கலங்கி நின்றாள். அவளைப் பார்த்தபொழுது அம்மாகண்ணுவைப் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. என் தம்பி வெளியேறியதும் அம்மாகண்ணும் உள்ளே வந்தாள். அவள் எங்கள் குடும்பத்தில் ஒருத்தியாக ஆகிவிட்டாள். அதைப்போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது அவளைப் பார்க்கும்பொழுது.

வக்கீல் பேசவில்லை அவர் அம்மா சொல்ல எழுதிக் கொடுத்தார். "நான் எனக்குச் சொந்தமான நகையை என் மருமகளிடம் கொடுக்கச் சொல்லி என் மூத்த மகனிடம் அனுப்பி வைத்தேன். அதை அவன் அங்கே கொடுக்கச் சென்றான். அவள் அதைத் தவறாக உணர்ந்துவிட்டாள். அவள் வீட்டிலிருந்த நகை என்று நினைத்தாள். நகை அவளுக்கு உரியது அல்ல. அது அவளுக்கு உரியது என்றால் அதை எடுத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/125&oldid=1462023" இலிருந்து மீள்விக்கப்பட்டது