பக்கம்:அரை மனிதன்.pdf/127

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா. சீனிவாசன்

125


 "ஏன் அதைத் தன் அலமாரியில் வைத்திருந்தார்" இது கேட்டது கண்ணன்.

"அதைப் போட்டுக் கொள்ளச் சொன்னார். நான் போட்டுக் கொள்ளவில்லை"

"ஏன் போட்டுக் கொள்ளவில்லை?”

"அவர்கள் நகையை நான் போட்டுக் கொள்வதில்லை என்ற வைராக்கியம் வைத்திருக்கிறேன்".

"ஆக உங்களுக்கு இதில் அனுபவ பாத்தியதையும் இல்லை" - வக்கீல்.

அவளால் பேச முடியவில்லை.

அம்மா பேசினார்கள்.

"இது அவர்கள் நகை என்றால் அவர்களிடம் கொடுத்து விடுங்கள். என் மகன் சிறை போவதைப் பற்றி நான் கவலைப் படவில்லை. அதை அவர்கள் கழுத்தில் அணியச் சொல்லுங்கள். நான் அவர்கள் நகை என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.”

"முடியாது. இதை அவமானமாகக் கருதுகிறேன். அவர்கள் நகையை மதிப்பதில்லை"

"அவர்கள் மகனை" - வக்கீல்

"அவர் என் கணவர். அதனால் அவரை மதிக்கிறேன்"

"பலபேர் இந்த நாட்டில் பிறந்தவர்கள். இதில் வாழ்பவர். ஆனால் பிறந்த மண்ணை மதிப்பதில்லை. அதில் இவர் ஒருவர்" என்று நான் என் கருத்தைச் சொன்னேன். மேலும் அவளைப் பார்த்துச் சொன்னேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/127&oldid=1462025" இருந்து மீள்விக்கப்பட்டது