பக்கம்:அரை மனிதன்.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா. சீனிவாசன்

11


 அவள் அதுதான் தங்கை, பத்தாயிரம் கொடுத்தால்தான் அவன் அவளை வைத்துக்கொண்டு வாழ முடியும். நாங்கள் ஒரு பாவத்தைச் செய்திருக்கிறோம். பணத்துக்கு ஆசைப் பட்டுத்தானே நாங்கள் அந்தப் பணத்தை மருமகளாகக் கொண்டோம். அதேபோலத்தான் அவனும் ஆசைப்படுகிறான். நீங்கள் மட்டும் பணக்காரச் சம்பந்தம் வைத்துகொள்ளவில்லையா? அவன் மட்டும் காரில் போகும்போது நான் ஸ்கூட்டரில் போகவேண்டாமா? இந்த மாதிரி உரிமைப் பிரச்சனைகளை அவன் எழுப்பினான். இது எப்பொழுதும் அழுது கொண்டே இருக்கும்.

"என்னை என்னம்மா செய்யச் சொல்றே".

பாவம் அப்பா என்னதான் செய்வார். எல்லா அப்பாவும் செய்கிறமாதிரி கடன் வாங்கி அவளைச் சரிப்படுத்தி அனுப்பி வைத்தார். இப்பொழுதுதான் என் கால் என்னை விட்டு நீங்கியதுபோன்ற நிலைமை ஏற்பட்டுவிட்டது. அந்த அச்சு எந்திரத்தைக் கடன்காரர் பெரிய மனது வைத்து விற்றுச் சரிப் படுத்திக்கொண்டார்கள். அப்பா மறுபடியும் கம்பாசிட்டர் ஆகிவிட்டார்.

நான்? என் மரக்கட்டை எனக்குத் துணைசெய்தது.

என்னால் இதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. என் தம்பிக்காக என் காலை இழந்தேன். என் கால்மேல் அவன் நின்றான். இந்தக் குடும்பமே அந்த அஸ்திவாரத்தின்மீதுதான் நின்றுகொண்டிருந்தது. பூகம்பம் வந்ததுபோல் எல்லாம் இடிந்து போன நிலையில் நான் நின்று விட்டேன்.

இந்த ஊக்கி (Lift) இருக்கிறதே அதை நான் பலமுறை பார்த்து இருக்கிறேன். மற்றவர்களைவிட அது எனக்கு மிகவும் தேவை. அது மேலே போகும்; கீழே வரும். மற்றவர்களைத் துாக்கிச் செல்லும்; தான் மேலே போகாது. மற்றவர்களை உயர்த்திவிட்டு மறுபடியும் அது கீழே வந்து நின்று விடும். நானும் அப்படித்தான் இருந்தேன். என் தம்பி மிக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/13&oldid=1149631" இருந்து மீள்விக்கப்பட்டது