பக்கம்:அரை மனிதன்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

அரை மனிதன்


 'மனிதன் ஒழுங்கு கட்டுப்பாடு என்ற சொற்களால் ரொம்பவும் வேதனை அடைகிறான். எந்தத் தப்பும் செய்யாமல் இருந்தால் அவனுக்கே சலிப்பு ஏற்பட்டு விடுகிறது. மனிதன் நல்ல மனம் பெற நாங்கள் மிக அவசியம். அது பல பேருக்குத் தெரியாது. ஆனால் யார் இங்கே மற்றவர்களுக்காகப் பயன்படுகிறார்களோ அவர்களைச் சமுதாயம் ஒதுக்குவது வெறுப்பது இயல்புதான். நாங்கள். இந்தத் தொழிலைப் பகிரங்கமாகச் செய்வது இல்லை.”

"எங்களை அறிமுகப்படுத்தும் பொழுது இடைத் தரகர் எங்களைக் குடும்பப் பெண் என்று தான் அறிமுகப்படுத்து வார்கள். அதாவது புதிதாக வந்தவர்கள் என்றுதான் சொல்லுவார்கள். அப்படிச் சொன்னால்தான் எங்களுக்கே 'ரேட்டு அதிகம். இதிலே ரொம்ப நடிப்பு வேண்டியிருக்கிறது. ரொம்பவும் வயதான இளைஞர்கள் அவர்களும் வருவார்கள். அவர்களால் எங்கள் உடம்பு கெடுவது இல்லை. மிக நல்லவர்கள். அவர்களிடத்தில் அபரிதமான அன்பைச் செலுத்துவோம். அவர்களுக்குத் தங்களுக்குத் தக்க வாலிபம் இல்லையே என்ற மனச் சிக்கலோடு நெருங்குவார்கள். நாங்கள் மிகவும் அவர்களால் கவரப்பட்டவர்கள் போல் நடிக்க வேண்டும்.'

'இதிலே ஒரு கஷ்டம் இருக்கிறது. நாங்கள் சம்பாதிப்பதைவிட எங்களை வைத்து நடத்துகிறவர்கள் ரொம்பவும் வசதி பெற்றுவிடுகிறார்கள். ஏனென்றால் நாங்கள் அஞ்சி அஞ்சி இத்தொழிலை நடத்த வேண்டி இருக்கிறது. அவர்கள் அதை நன்றாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். நாங்கள் போலீசுக்கு அஞ்ச வேண்டியிருக்கிறது. சில சமயம் அவர்கள் எங்களை வேட்டையாடி கோர்ட்டில் நிறுத்தி விடுவார்கள்'

'நாங்கள் எங்கள் ஆடை வாங்குவதற்காக மானத்தை விற்கிறோம்" என்று எங்கோ ஒரு கவிதை படித்து இருக்கிறேன். அவள் பேசும்பொழுது அந்தக் கவிதை நினைவுக்கு வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/32&oldid=1461940" இலிருந்து மீள்விக்கப்பட்டது