பக்கம்:அரை மனிதன்.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

அரை மனிதன்


 மாட்டானாம். தப்பாக நினைக்க வேண்டாம். மனதில் எதையும் வைத்துக் கொள்ள மாட்டானாம். அந்த ஆஸ்பத்திரியின் மருந்துகள் திருடு போவதில் இருந்து டாக்டர்கள் பிரைவேட் பிராக்டிக்ஸ் செய்து கொள்ளையடிக்கும் வரை ஒன்றுகூட மறைக்காமல் பேசிக் கொண்டிருப்பானாம்.

அவன் இப்படிப் பேசுவதாலேயே அவனை 'டிஸ்சார்ஜ்' செய்வது இல்லையாம் வெளியே போனால் இதையே உளறிக் கொண்டு இருப்பான் என்பதற்காக. அவன் ஒரு விசித்திரமான மனிதன். அவனைப் பற்றி நானும் நிரம்பக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவனுக்குப் புறம்கூறுவதே தொழில். இப்படி எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவனைப் பற்றி ஏன் நான் புறம்கூற வேண்டும். பின்னால் அப்பா ஒருசமயம் யாரிடமோ சொன்னாராம். அவர் என்னிடம் வந்து போனார். அதற்கப்புறம் தன் மகன் வீட்டுக்கு எந்தக் காரணத்திற்கும் போவது இல்லை என்று தீர்மானித்து விட்டாராம்.

"டேய்! உனக்குக் கருமாதி செய்துவிட்டேன்" என்று வயிறு எரிந்து பேசினாராம். அதற்கப்புறம் அவர் நெஞ்சில் எழுந்த கனல் அழியவே இல்லை."இரண்டு பிள்ளைகளைப் பெற்றேன்; ஒருவன் படித்தான்; பண்பு இழந்தான்; மற்றொருவன் காலை உடைத்துக் கொண்டு ஊர் சுற்றுகிறான். யாரால் எனக்கு நன்மை" என்ற கேள்வியை விடாமல் அவர் கேட்டுக் கொண்டு இருக்கிறார்.

அப்பாவுக்கு இப்பொழுது கண் “காட்டிராக்ட்". எழுத்தைப் பார்க்க முடிவதில்லை. ஆறுமாதம் போனால்தான் 'பொறை' எடுப்பார்களாம். அதுவரை குருடாகத்தான் வாழ வேண்டுமாம். வைத்தியர் அப்படிச் சொல்லி விட்டார். கம்பாஸ்டர் வேலைக்கு அவர் தற்காலிகமாக லாயக்கற்றவர் ஆகிவிட்டார். பாவம், பழைய பாட்டு ஒன்று நினைவுக்கு வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/38&oldid=1154628" இருந்து மீள்விக்கப்பட்டது