பக்கம்:அரை மனிதன்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



94

அரை மனிதன்



போய் இருக்கிறார்கள். அது உன் கையில் இருக்கிறது. அப்பொழுது நீதான் திருடன்."

"அது யாராவது என் கையில் கொண்டு வந்து கொடுத்திருக்கலாம். அல்லவா”.

"அந்த ஆளை நீ காட்டிக் கொடுக்கும் வரை நீதான் திருடன்.அதுதான் சட்டம்".

அந்த சப்-இன்ஸ்பெக்டர் சட்டம் தெரிந்தவர். அறிவாளி. முரட்டுத்தனம் அவரிடம் இல்லை. நான் நொண்டி என்பதால் என்னிடம் பொறுமையாகப் பேசினார். உண்மையில் நான் அவரைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

மேல் நாட்டிலேதான் குற்றவாளியைக் கண்ணியமாக நடத்துவதாகக் கேட்டு இருக்கிறேன். நம் நாட்டில் இதுவரை அப்படி நடத்தியதாகப் பத்திரிகையில் செய்தி வரவில்லை. அப்படி நடத்த வேண்டும் என்று அமைச்சர்கள் பேசும் பேச்சே செய்தியாக வருகிறது. ஒரு வேளை அந்தச் செய்தியை அந்த சப்-இன்ஸ்பெக்டர் படித்து இருக்கலாம். மனம் மாறி இருக்கலாம்.

"குற்றமும் தண்டனையும்" இந்த நாட்டில் சரியாக இல்லை என்பதை உணர்ந்தேன்.

சட்டத்தின் பிடியில் அகப்பட்டால்தான் ஒருவன் குற்றவாளி ஆகிறான்; அது வரை அவன் குற்றவாளி அல்ல. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில்லை; சட்டத்தின் பிடியில் அகப்படுபவர்கள் மட்டும் தண்டிக்கப்படுகிறார்கள்.

சட்டப் பிடியில் அகப்பட்ட பிறகு நான் குற்றவாளிதான். மற்றொரு ஆளைக் காட்டிக் கொடுக்கிறவரை நான் குற்றவாளிதான். யாரைக் காட்டிக் கொடுப்பது.

அன்றுதான் அங்கே திருடுவதற்காக அந்தப் பக்கம் ரங்கன் வந்திருந்தான். அவன் அம்மாகண்ணுக்கு ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/96&oldid=1461993" இலிருந்து மீள்விக்கப்பட்டது