பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/170

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பயனை அடைவதற்குத் தடையாய் உள்ளவைகள் 143 வேண்டும். சம்சாரிகளின் முன்னிலையில் தன்னுடைய உயர்ந்த நிலையை அநுசந்திக்க வேண்டும். அடைய வேண்டிய விஷயத்தில் விரைவும், உபாயத்தில் நம்பிக்கை யும், விரோதியில் பயமும், உடலில் பற்றற்ற நிலையும், ஆர்த்தியும், சொரூபத்தில் உணர்த்தியும், தன்னைக் காத்துக் கொள்வதில் ஆற்றலின்மையும், உத்தேசிய விஷயத்தில் கெளரவமும், உபகார விஷயத்தில் நன்றியுட னிருத்தலும், ஈடேற்றுவதால் அறிவுடைமையும், அநுவர்த்திக்கையும் வேண்டும். இங்ங்னம் ஞான அநுட்டானங்களுடன் கூடி வாழ்க்கை நடத்துபவன் ஈசுவரனுக்குப் பிராட்டிமாரிலும், நித்திய முக்தரிலும் விசேஷ விருப்பமுடையவனாகக் கருதப்பெறுவான்.