பக்கம்:அறநிலையங்கள், சொற்பொழிவு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

அறநிலையங்கள்

பறந்துவந்தால், நாம் அதைப் பிடிக்கமுடியுமா? அப்படிப் பறந்துவரும் புறாவை, நாம் பிடித்தாலும், மண்ணடி கவுஸ் வீட்டுக்காரர் சும்மாயிருப்பாரா?

சிபிச்சக்கரவர்த்தி செய்ததைப்போலச் செய்ய, நமக்கு எங்கே அவ்வளவு சதையிருக்கிறது? வேண்டுமானால், மடாதிபதிகள், அதைச் செய்யலாம்.

சிவராத்திரி அன்று, காட்டுக்குள் ஒருவன் சென்றான். காடு இருண்டுவிட்டது. வீட்டிற்குத் திரும்ப எண்ணினான். பின்னால், ஒரு புலி, தன்னை நோக்கி வருகிறதைக் கண்டான். உடனே, அருகில் இருந்த வில்வமரத்தில் ஏறிக்கொண்டான். மரத்தினடியிலே ஒரு சிவலிங்கம் இருந்தது. அதை அவனறியான். துரத்திவந்த புலியும், மரத்தினருகே வந்து நின்றது. இவன், மேலே ஏறியிருப்பதைப் பார்த்து, இவனைக் கொல்ல எண்ணி, அங்கிருந்து செல்லாமல், மரத்தையே சுற்றிச் சுற்றி வந்தது. மரத்தின் மேலிருந்தவன் பார்த்தான். கீழே இறங்கிச்செல்ல வழியில்லை. இரவாகியதால், தூங்கி விடுவோமோ என்ற அச்சம் ஏற்பட்டது. தூங்காமல் இருப்பதற்காக, மரத்திலிருந்த வில்வ இலைகளை ஒவ்வொரு தழையாகக் கிள்ளிக் கீழே கொண்டிருந்தான். எனினும், மறுதினம் அவ்ன் மாண்டான். அவனுடைய உயிரைப் பிடித்துப்போக எமதூதர்கள் வந்தார்கள். உடனே சிவகணங்கள் வந்து, ”அவர் உயிரைத் தொடாதே? அவர் சிவபக்தர்” என் சொல்லி, அவனைக் கைலாயத்துக்கு அழைத்துச்சென்றன. தன்னுடைய உயிரைக் காக்கவேண்டி, சிவராத்திரியன்று விழித்திருந்து, சிவலிங்கம் என்றும் அறியாமல் கீழே கிள்ளிப்போட்ட தழைகளினால், அவனுக்கு முக்தி கிடைத்ததாகப் புராணம் கூறுகிறது. சாக்கிய நாயனார்