பக்கம்:அறநூல் தந்த அறிவாளர்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

அறநூல் தந்த அறிவாளர்



அதிவீரராமர் படையெடுப்பு

அதிவீரராமர் நால்வகைப் படைகளுடனும் சென்றார். வரதுங்கர் வாழும் கல்லுரரின் எல்லையை அடைந்தார். ஆங்கொரு சோலையில் தங்கினார். தமது படையெடுப்பைத் தமையனருக்குத் தெரிவிக்குமாறு தூதன் ஒருவனே அனுப்பினார். அவன் திரும்புவதற்கு நீண்ட நேரம் ஆயிற்று. ஆதலின், தாமே நேரே சென்று தமையனாரைச் சக்திக்க நினைத்தார். நகருள் புகுந்து வரதுங்கர் அரண்மனையை அடைந்தார். தமையனார் சிவபூசை செய்து கொண்டிருப்பதாகச் செய்தி அறிந்தார். அவரது பூசையறையின் பக்கமாகவே சென்று வெளியே காத்திருந்தார்.

வரதுங்கரின் பாடல்

வரதுங்கள் நாள்தோறும் தமது பூசை முடிவில் சிவபெருமான்மீது சொந்தமாகவே ஒரு செந்தமிழ்க் கவி பாடி வழிபடுவார். வழக்கம்போல் அன்றும் ஒரு கவியைப் பாடி வழிபட்டார். 'சிவன் காதுகளில் சங்கையே குண்டலமாக அணிந்தவன். தென்திசையில் உள்ள கரிவலம்வந்த நல்லூரில் எழுந்தருளும் இறைவன். கங்கையைச் சடைமுடியில் தரித்தவன். இத்தகைய சிவபெருமான்மீதே புலவர்கள் எல்லோரும் கவி புனையவேண்டும். அவ்-