பக்கம்:அறநூல் தந்த அறிவாளர்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

 அறநூல் தந்த அறிவாளர்


வனை எவரும் வருக என்று வரவேற்க பாட்டார். அவருள் கல்வி அறிவுடைய ஒருவனையே அரசனும் போற்றுவான். அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்னும் நான்கு கலத்திலும் கற்றவனையே மற்றவர் வழிபடுவர்.' இதுவே அப்பாண்டியன் பாடற்கருத்து ஆகும்.

சிறுவர்க்கு அறிவுரை

கல்விச் சிறப்பைப் பற்றிய இக்கருத்துக்களை அதிவீரராமர் சிறுவர்க்கு அறிவுறுத்த விரும்பினார். நெடுஞ்செழியன் பாட்டிற்கு விளக்கம் செய்பவரைப் போன்று சிறுசிறு தொடர்களால் அக்கருத்துக்களை அறிவிக்கிறார்.

'கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே.'
'கல்லா ஒருவன் குலநலம் பேசுதல்
செல்வினுட் பிறந்த பதரா கும்மே.'
'நாற்பால் குலத்தின் மேற்பால் ஒருவன்
கற்றில னாயின் கீழிருப் பவனே.'
'எக்குடிப் பிறப்பினும் யாவரே யாயினும்
அக்குடியில் கற்றோரை மேல்வரு கென்பர்.'
'அறிவுடை யொருவனை அரசனும் விரும்பும்.'
'அச்சமுள் ளடக்கி அறிவகத் தில்லாக்
கொச்சை மக்களைப் பெறுதலின் அக்குடி
எச்சமற் றேமாந் திருக்கை நன்றே.'