பக்கம்:அறநூல் தந்த அறிவாளர்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

அறநூல் தந்த அறிவாளர்



ஆதீன மடத்தில் சோதனை

ஒரு நாள் சிவப்பிரகாசர் தம் கருத்தை அண்ணாமலை ரெட்டியாரிடம் அறிவித்தார். பின்னும் அவர் சிவப்பிரகாசரை விட்டுப் பிரிவதற்கு விரும்பவில்லை. திருநெல்வேலிக்குச் சென்று திரும்பிய பின்னர், அங்குத் தங்குவதாகக்கூறி விடை பெற்றார். திருநெல்வேலியை அடைந்து தருமை ஆதீனத் திருமடத்தில் வீற்றிருந்த வெள்ளியம்பலவாணரைக் கண்டு வணங்கினார். அவரிடம் தமது வரலாற்றைப் பணிவுடன் தெரிவித்தார். அவர் சிவப்பிரகாசரின் செந்தமிழ்ப் புலமையைச் சோதிக்க விரும்பினார். ‘கு’ என்ற எழுத்தில் தொடங்கி ‘கு’ என்று முடியுமாறும், இடையில் ‘ஊருடையான்’ என்ற தொடர் அமையுமாறும் ஒரு செய்யுள் இயற்றுமாறு கட்டளையிட்டார். உடனே,

‘குடக்கோடு வானெயிறு கொண்டாற்குக் கேழல்
மூடக்கோடு முன்னமணி வாற்கு—-வடக்கோடு
தேருடையான் தெவ்வுக்குத் தில்லைதோல்
ஊருடையான் என்னும் உலகு’ [மேற்கொள்ளல்

என்று சிவப்பிரகாசர் பாடியருளினார்.

தம்பிரானிடம் தமிழ் இலக்கணப் பயிற்சி

இப்பாட்டைக் கேட்ட தம்பிரான் மிகவும் மகிழ்ந்தார். ‘ஊருடையான்’ என்ற