பக்கம்:அறந்தாங்கித் தொண்டைமான்கள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

745 குளத்தூர்ப்‌ பாளையம்‌ விசயரகுநாதராயத்‌ தொண்டைமான்‌ (7730-1759). காலத்தில்‌ புதுக்கோட்டை சமஸ்தானத்துடன்‌

இணைக்கப்பட்ட, து.

தொண்டைமான்‌ மரபினரின்‌ சில தெலுங்கு மொழித்‌ தொடர்புச்‌ சொற்களையும்‌, மிகச்சில தெலுங்கு ஆவணங்களையும்‌ கொண்டு இவர்கள்‌ தாய்மொழி தெலுங்கு என்று புதுக்கோட்டை மாவட்ட வரலாற்றில்‌ ஜெ.ராஜாமுகம்மது அவர்கள்‌ எழுதியுள்ளார்கள்‌.

தமிழகக்‌ குறுநில மன்னர்கள்‌, பாளையக்காரர்கள்‌ அனைவருமே மதுரை நாயக்கர்‌ ஆட்சிக்காலத்தில்‌ தங்கள்‌ நிர்வாகத்தில்‌ பல நிலைகளில்‌ தெலுங்கைக்‌ கையாண்டனர்‌. அம்முறையில்‌ தொண்டைமான்கள்‌ தெலுங்கைப்‌ பயன்படுத்தினரே தவிர இவர்கள்‌ தெலுங்கர்கள்‌ அல்லர்‌.