பக்கம்:அறப்போர்.pdf/106

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறப்போர்


இல்லை. ஆகவே அந்த நாட்டில் வாழும் வாழ்வு நாமாகச் செயல் செய்யும் சுதந்தரம் இல்லாத வாழ்வு. கொடுக்கும் கையையும் வாங்கும் கையையும் கட்டிப் போட்டிருக்கிற நாடு. செயல் அற்றுப்போன நாடு. அதைப் பரிசிலர்கள் விரும்புவதில்லை.

இப்படித் தேவருலகத்தையும் விரும்பாத பரிசிலர் சோழநாட்டை விரும்புகிறாரர்கள். எப்போதும் இந்த நாட்டை நினைத்துக் கொண்டிருக்கிறாரர்கள். இந்த நாடு சோறுடைய சோழ நாடாகலின் சொர்க்க போகம் இங்கே இருக்கிறது. அதற்குமேல், விண்ணாட்டில் இல்லாத ஈகை இங்கே இருக்கிறது. இவ்வளவுக்கும் மூல காரணமாக மன்னர்பிரான் இருந்து நாட்டு வளத்தையும் வரிசையறிந்து ஈயும் ஈகையையும் வளர்த்து வருவதனால், பகைவர் நாட்டிலே வாழ்ந்தால் கூடப் பரிசிலர்களெல்லாம் இங்க நாட்டையே நினேத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்க, மன்னர்பிரானுடைய குடை நிழலிலே பிறந்து அந்த நிழலிலே வளர்ந்து வரும் எங்களைப் பற்றிச் சொல்லவேண்டுமா, என்ன? எங்கே போனல்தான் என்ன? மற்ற இடங்களுக்குப் போகும்போதுதான் இந்த நாட்டின் பெருமையையும் மன்னர் பிரானுடைய அருமையையும் நன்றாக உணர்ந்து, பின்னும்

88

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/106&oldid=1267475" இருந்து மீள்விக்கப்பட்டது