பக்கம்:அறப்போர்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறப்போர்


தைப் பெற்றதனால் நான் பெரும்பேறுடையவனானேன். இந்த நட்பு என்றும் வாடாமல் மேலும் மேலும் உரம் பெறும் வண்ணம் நான் நடந்துகொள்ள அவனருள் கூட்டுவிக்கும் என்றே நம்புகிறேன்” என்றான் குமணவள்ளல்.

அவனுடைய பேச்சிலே அடக்கமும் அன்பும் ததும்புவதை உணர்ந்த பெருஞ்சித்திரனார் இன்பக் கடலில் நீந்தினார். பொழுது போவதே தெரியாமல் புரவலனும் புலவரும் அளவளாவினர். சில நாட்கள் குமணனுடைய அரண்மனையில் அரச போகம் பெற்றுத் தங்கினார் புலவர். பிறகு தம் மனைவி முதலியோருடைய நினைவு வரவே, மெல்ல விடைபெற்றுக்கொண்டு புறப்பட எண்ணினார்.

அவரை அனுப்புவதற்குக் குமணன் விரும்பவில்லை. இன்னும் பல நாட்கள் புலவரைத் தன்னுடன் இருக்கச் செய்ய விரும்பினான். ஆயினும் புலவருடைய மனைவி குழந்தையை ஈனும் பருவத்தில் இருக்கிறாள் என்பதைக் கேட்டு விடை கொடுத்தனுப்பினான். பல மாதங்களுக்கு ஆகும் வண்ணம் உணவுப் பண்டங்களையும் ஆடை அணிகளையும் பொன்னையும் வழங்கினான். அவற்றைச் சுமந்து சென்று புலவருடைய வீட்டிலே சேர்க்கும்படி ஆட்களையும் வண்டிகளையும் அனுப்பினான்.

114

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/132&oldid=1267506" இலிருந்து மீள்விக்கப்பட்டது