பக்கம்:அறவோர் மு. வ.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

அறவோர் மு. வ.

1952 ஆம் ஆண்டு தனித்து இளங்கோ’ என்னும் நாடகமும், பின்னர் எழுதப் பெற்ற திலகவதியார் 'வீண் கனவு’ என்னும் இரண்டு நாடகங்களும் காணப்பெறுகின்றன. நாடகத் தொகுதியின் முன்னுரையில்.

இளங்கோ நாடகம் கி. பி. 3 ஆம் நூற்றாண்டில் சிலப்பதிகாரம் இயற்றிய ஆசிரியரைப் பற்றிய கற்பனை; "திலகவதியார்" சேக்கிழாரின் காவியத்தை ஒட்டி அமைந்தது; அது கி.பி. 7 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் ஆண்ட சோழவேந்தன் இராசேந்திரன் வாழ்வைப் பற்றிய கற்பனை 'வீண் கனவு’ என்பது.

என்று குறிப்பிடுகின்றார் டாக்டர் மு.வ.

'இளங்கோ' என்னும் நாடகத்தைக் குறித்து முன்னர்க் குறிக்கப்பெற்றது. 'திலகவதியார்’ என்னும் நாடகம். நாவுக்கரசர் மற்றும் அவரது உடன் பிறந்தாளாகிய திலகவதி ஆகியோரின் வாழ்க்கையை நாடக வடிவில் கூறுகின்றது; தொண்டுள்ளத்தை நாடக மாந்தர்களின் வாயிலாகவும் நாடகப் போக்கின் வாயிலாகவும் வலியுறுத்துகின்றார். 'வீண் கனவு’ என்னும் நாடகத்தில் நாட்டில் போரே இனி கூடாது எனச் சோழ அரசன் கனவு காண்கின்றான்; கடந்த காலத்தின் நிகழ்ச்சிகளையும், வரலாற்றையும் நம்மால் மாற்றவியலாது என்றும், போர்கள் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்று கூறுவதெல்லாம் நமது விருப்பின் வழிப்பட்ட எண்ணமே என்றும், அவ்வகை எண்ணங்கள் வீண் கனவு என்றும் சோழன் மரணப்படுக்கையின்போது உணர்கின்றான் என்றும் கூறுகின்றது.

செவிடரும் இன்புறக் கூடிய வகையில், குருடரும் மகிழக் கூடிய வகையில் நாடகத்தில் நடிப்பும் உரை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/115&oldid=1462058" இலிருந்து மீள்விக்கப்பட்டது