பக்கம்:அறவோர் மு. வ.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

அறவோர் மு. வ.

வேண்டும். உத்திமுறை என்பது படைக்கப் பெறுகின்ற படைப்பின் தன்மையைப் பொறுத்து அமைவதாகும். கதைக்கும் புதினத்திற்கும் உள்ள வேறுபாட்டை எடுத்துக் காட்டும் கலை உத்தி எடுத்துரை முறை ஆகும். இதனை நோக்குநிலை என்பர். இது படைப்புத்திறனின் தலைவாயில் ஆகும். இந்நோக்குநிலையை, அகநோக்குநிலை, புறபோக்குநிலை என்று திறனாய்வாளர்கள் பிரித்துக் காண்பர். டாக்டர் மு. வ. தம் நாவல்களில் ஆறுவகையான உத்திமுறைகளைக் கையாண்டுள்ளார்.

1. தலைமை மாந்தர் தற்கூற்றுப்போக்கில் அமைந்தவை; அல்லி, நெஞ்சில் ஒரு முள், மண்குடிசை.

2. தலைமை மாந்தர் மாறி மாறிக் கதையை எடுத்துரைப்பது: கள்ளோ? காவியமோ?

3. கதை மாந்தருடன் நேரடி தொடர்பு கொண்டோர் கதையை எடுத்துரைக்கும் பாங்கின: அகல் விளக்கு, வாடாமலர்.

4. துணைமாந்தர் கதை கூறுவதுபோல் அமைந்தன: மலர்விழி, கரித்துண்டு.

5. கதைமாந்தர் பலரும் மாறிமாறிக் கதையை உரைப்பது : செந்தாமரை.

6. ஆசிரியர் கூற்றில் - படர்க்கைக் கூற்றில் அமைந்தவை : பாவை, பெற்ற மனம், கயமை.

இந்நோக்கு நிலைகள் டாக்டர் மு. வ. வின் நாவல்கள் வெறும் கருத்துரைப் படைப்புகள் என்ற கருத்தையே மாற்றவல்ல கலைக்கூறாய் அமைந்துள்ளன.

நாட்குறிப்பும் கடிதமும்

டாக்டர் மு. வ. இரு நோக்குநிலையில் தம் நாவல்களைப் படைத்திருந்த போதிலும், கலைத்திறனை வெளிப்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/87&oldid=1211915" இலிருந்து மீள்விக்கப்பட்டது