பக்கம்:அறிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

'நன்மையை நயந்து நல்லோர் நவில்வது நாட்டி லுள்ள
புன்மையைப் போக்கற்' கென்பர் புலவர்கள்! புலன்கெட் டீர்நீர்!
பன்மையைக் காணேம் ஆய்ந்து பார்த்திடி னொருமை யன்றி!
'சின்மய' மென்ப திந்தத் தெளிவெனத் தெரியா தீர்நீர்!

என்பண்ணை யெனஇன் றென்வாய் இயம்பிடக் கூசிற் றண்ணி
தன்பண்ணை தனில்சேர்ந் தோர்கள் தரக்குறை வின்றித் தாமாய்ப்
பின்பெண்ணிப் பெருக்கி வாழப் பெரும்பொருள் பெற்றார்! உங்கள்
முன்,பண்ணை யாள்சா கின்றான் முதுமையெய் தாமுன்!" என்றான்.

மாணிக்கத்தின் மாட்சிமை

சத்தியன் சகித்தான் , நெஞ்சில் சஞ்சலம் மிஞ்சிற் றேனும்;
உத்தமி மாணிக் கம்,பின் 'ஓ'வெனக் கதறி னாளாய்,
"இத்தனை போதும்; யாரும் இனிப்பேச வேண்டாம்! பேசின்
செத்திடு வேன்நா" னென்றே செங்கையைக் கூப்பி நின்றாள்.
 
"எப்போது மியம்பு வீர்நீர்: 'ஏறைக்கோன் மரபி னோர்கள்,
தப்பேதுஞ் செய்யார்; தாமாய்த் தார்மிகத் தருமம் காப்பார்!
ஒப்பாத போது யார்க்கும் ஒருதுளி மடங்கா' ரென்றே.
இப்போது மறந்தே னப்பா! இயம்பினீ ரேறு மாறாய்?

உற்றதை உரிமை யோடும் உரைத்திட வந்த தந்தை;
கற்றதை யன்றி வேறு கழறாத கொழுந்தன்; காய்ந்து
பற்றதை மறந்து நீங்கள் பண்பறப் பகைப்பீ ராயின்,
எற்றிதைப் பார்த்து நாங்கள் இருந்தினிச் சகிப்ப திங்கே?

நயம்பட நவிலல்

எப்போது மெழுதிப் பேசி எங்கும்பா ராட்டப் பட்டுச்
சிப்பாயே வந்த போதும் சிறையிலே யடைத்த போதும்
துப்பாக்கி தூக்கி நீட்டிச் சுட்டபோ திலுமஞ் சாத
அப்பாவின் சொல்லும், அப்பா! அரியவுன் நலனுக் குத்தான்!