பக்கம்:அறிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

75

நினைப்பு நிறைவேற்றம்‌

நன்றென விடிந்த அந்நாள்‌ நலந்தரும்‌ நன்னாள்‌! வீட்டில்‌,
நின்றதோர்‌ மெளனம்‌ சற்று, நேரமே நிலவிற்‌ றன்று,
தன்றிறம்‌ தவிரக்‌ கல்வித்‌ தனித்திறம்‌ பெற்ற வேணி
அன்றென அனைத்தும்‌ நன்றா யமைந்திடச்‌ சமைத்து வைத்தாள்‌.

மதுவிடை யீயாய்‌ நாக்கு, மகிழ்ந்திடும்‌ சுவைகட்‌ கேற்ப,
மெதுவடை சாம்பார்‌? பூரி 'மென்கிழங்‌ கிட்லி சட்னி;
புதுவுடை பொலிய வேணி புரிந்துடன்‌ படைக்கப்‌ போந்து
பதிவுட னமர்ந்துண்‌ ணுங்கால்‌, பகர்ந்திட லானார்‌ மாமா:

"பண்டங்கள்‌ பலவும்‌ பாங்காய்ப்‌ பல்‌சுவை பயக்கப்‌ பண்ணும்‌
பெண்டுக ளுள்ள வீட்டில்‌ பேச்சில்லை; பிணக்கு மில்லை;
கண்டதும்‌ களித்தேன்‌ வேணி கைராசிக்‌ காரி யென்றே!
உண்டவர்க்‌ குவப்புண்‌ டாயின்‌ ஊறுண்டா காதங்" கென்றே.

மாணிக்கம்‌ திருமணப்‌ பேச்சைத்‌ தொடங்கும்‌ பாணி

மருமகன்‌ மார்கள்‌, மாமா, மாணிக்கம் மகிழ்ந்து, மாறி
யொருமுக மாக வூன்றி யுறவுறப்‌ பார்க்கத்‌ தன்னைத்‌
திருமக ளனைய வேணி திடுக்கிட்டுத்‌ தலையைத்‌ தாழ்த்தப்‌
பெருமிதம்‌ பெருகப்‌ பின்னர்‌ பேசினாள், பேரன்‌ புப்பெண்‌:

"பெற்றஎன்‌ மகவி ரண்டு, பெறாமக விரண்டு! பேண
வுற்றிவ ருடனே, நாங்கள்‌ உறைகுவ மறுவ ராகி!
கற்றவர்‌ கருதிக்‌ காணக்‌ கண்ணியம்‌ கமழ்ந்த தப்பா!
மற்றிவர்‌ மணக்க நீங்கள்‌ மனமொன்றி முயல்க! வென்றே.