பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/111

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புலவர் என்.வி. கலைமணி 103

நான் கற்பனை செய்யவில்லை. இப்போது கடலின் அடி பாகத்தில் இருக்கிறேன். அங்கே அலைகள் இல்லை.

நீரின் அமைதி - அழுத்தமானப் பாறைகளைப் போல, மவுனம் சாதித்துக் கொண்டிருக்கின்றது.

நான் கடலின் உள்ளிருந்து, வானோக்கி, அண்ணாந்துப் பார்த்தேன். ஒரே ஒளிமயம், நீர் மட்டத்தில் இருந்தது. இப்போது நான் வியப்படைகிறேன்.

ஒரு முழுநிலவு, எனது காலடியில் இருந்தது: நான் வெளி உலகத்தில் பார்த்த நிலவைவிட இந்த நிலவு ஒழுங்காக வரையப்பட்டிருந்தது.

ஒரு தடவை, அறிஞர் அண்ணா அவர்களிடம் இந்தக் காட்சியைக் காண முடிந்தது.

தூய அன்போடு இருக்கும் அவரை, "என்னை உங்களது அறி வாழத்திற்கு அழைத்துப் போங்கள்’ என்று வேண்டி நின்றேன்.

தம்பி! நீ ஓர் எஃகு தோளன் - புரட்சிமனோபாவம் கொண்டவன். ஆழத்திற்கு வந்து என்னைப் போல ஒடுங்கி விடாதே’ என்றார்.

நான் இனிப்புக்காக அழும் குழந்தைகளைப் போல அழ ஆரம்பித்தேன். எனது அன்புப் பிடிவாதத்தை அவரால் மீற முடியவில்லை. இதயத்தின் தாள் திறந்தார். நான் அதனுள்ளே வேகமாக ஓடிவிட்டேன்.

அங்கே, நான் பார்த்த காட்சி, கற்றக் கல்வியனைத்தும் ஒரு முழுமை பெற்றிருந்தது. அவற்றை உணர ஆரம்பித்தேன். அதன் மென்மை, நிலவின் நிழலைவிட அழகாக இருந்தது!

வெளியிலே அவர் சீறும் திட்டங்களைத் தீட்டிக் கொண்டிருந் தார் - கடலின் வேகமான அலைகளைப் போல. ஆனால் கடலடியில், மோன உருவோடு, சலனமற்றிருந்தார்!

அறிவின் மேற்பகுதி, எப்போதும் விடுதலைத் தலைவர் களுக்கு அலையாகவும் - தொண்டர்களுக்கு நிலவாக இருப்பதையும் - என்னால் அறுதியிட்டுக் கூற முடிந்தது.