பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/195

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ફેંક્સ தி. இக இகளில்

క్షీ நைகா

உவமைக் கவிஞர் சுரதா

என்னுடைய நண்பர் திரு.என்.வி. கலைமணி அவர்கள், மிகச் சிறந்த எழுத்தாளர், மேடைப் பேச்சாளர்- நல்ல சிந்தனையாளர்.

இலக்கியத் துறைக்கும், மொழிக்கும், நாடகக்கலைக்கும், பத்திரிகைத் துறைக்கும், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், புரட்சித்தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் ஆகியவர்களால் பாராட்டப்படும் அளவிற்கு அரும்பணிகள் ஆற்றியவர் அவர்.

நான், சினிமாத் துறைக்கு வருவதற்கு முன்பே, எனக்குப் பழக்கப்பட்ட நண்பர்களிலே அவரும் ஒருவராவார்.

தமிழ்நாட்டில் உள்ள எல்லா அறிஞர் பெருமக்கட்கும் பழக்கமானவர்.

பழக்கமானவர் என்றால், அத்தனை பேரும் மதித்துப் பாராட்டுமளவிற்கு நேர்முகமாகவே பழக்கமான பண்பாளர்.

தமிழ்நாட்டின், அரசியலில் - இலக்கியத்தில், வரலாற்றில் மிகச் சிறந்த வேகமாக, விரைவாக எழுதும் எழுத்தாளர்களை நான் அறிவேன்.கல்கி தினசரி ஆசிரியர் டி.எஸ்.சொக்கலிங்கம்,காண்டீபம்' ஆசிரியர் எஸ்.எஸ். மாரிசாமி ஆகியவர்கள் வரிசையில், நண்பர் புலவர் என்.வி. கலைமணி நான்காவது எழுத்தாளராக என்னால் மதிக்கப்படுவர்.

மனிதனுக்கு ஒரு கையில் ஐந்து விரல்கள் எப்படி இன்றியமையாததோ அந்த விரல்களில் நண்பர் என்.வி.கலைமணி அவர்கள் பெருவிாலைப் போன்றவர்.

இத்தகைய நண்பர் எழுதிய அறிஞர் அண்ணா நினைவஞ்சலி நூலைப் பற்றிக்கூற வேண்டுமோ! நீங்களே படித்து மகிழ வேண்டும் என்பதுதான் எனது அவன,

56அ, இலட்சுமணசாமி சாலை கலைஞர் கருணாநிதி நகர், இந்தி: சென்னை - 608 078.

அன்புடன்