பக்கம்:அறிவியற் சோலை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழைப்பாளிகளின் தலைவன் 21 கடல்மடை திறந்தது போன்று சொற்பெருக்காற்றும் இவரது வன்மையினை உணர்ந்தோர், இவரைப் பொறுப்பு வாய்ந்த பதவியில் அமர்த்தினர். கருமமே கண்ணுயினர் தாம் பெற்ற உயர்ந்த பதவிக்காகத் தங்கள் கொள்கைகளை உதறித் தள் ளும் தன்மையினர் அல்லர் , அதுபோல் இவரும் தளரா முயற்சி யோடு, ஆட்டமில்லாக் கொள்கையோடு, ஆலை களிலே, சாலைகள் ஒரத்திலே, சந்துபொந்துகளிலே வீரமுழக்கம் செய்து வந்தார். இதற்கிடையில் ஆட்சி யிலிருந்த சோசலிசக் குடியரசுக் கட்சியினர் நாட்டிலே காணும் இம்மறுமலர்ச்சிக்குக் குழி தோண்ட ஆரம் பித்தனர். புதிதாகத் தோன்றிய இப்புரட்சியினைப் பொசுக்கி, அதில் பங்கு கொண்டோர்களை நசுக்கி விடுவதற்கான எல்லா வழிகளையும் மேற்கொண் டனர். துணையாக நாட்டின் காவல் படையும் புறப்பட்டது. கேட்க வேண்டுமா ? புரட்சியில் கலந்தோர் யாவரும் சிறையில் தள்ளப்பட்டனர் ராகோசியும் உட்பட. கடுஞ் சிறையிலிருந்தோர் காலம் மாறுமெனக் காத்திருந்தனர்; காத்திருந்தது வீண் போகவில்லை; காலமும் மாறத் தொடங்கியது. புரட்சி வீரர்களின் அயரா உழைப்பினையும், தளரா ஊக்கத்தினையும் கண்டு அசந்துபோன அரசாங்கம் இவர்களுடன் நட்புக்கொள்ளத் தொடங்கியது. இவர்களது திட்டங் களையும் ஒப்புக்கொண்டது. இரண்டு கட்சிகளும் இரண்டறக் கலந்தன. புதுக் கட்சிக்கு ஹங்கேரியின் சோசியலிசக் கட்சி எனப் பெயரிடப்பட்டது. மக்களால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/27&oldid=739261" இலிருந்து மீள்விக்கப்பட்டது