பக்கம்:அறிவியற் சோலை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழுது சில தவறுகள் செய்தாரென்றும், அதற்குத் தக்க விடை இப்பொழுது கூறவேண்டுமென்றும் கூறி, எதிரிகள் இவர்மீது மீண்டும் வழக்குத் தொடர்ந் தனர். கி. பி. 1934-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் புடா பெஸ்ட் நகரத்திற்கு இரண்டாவது விசாரணையின் பொருட்டு, ராகோசி கொண்டு வரப் பெற்ருர், அதுகால் இதனை எதிர்த்து உழைப்பாளிகள் நாடெங்கனும் கிளர்ச்சி பல செய்தனர் ; தொழிலாளர் படை போன்று திரண்டு ஊர்வலங்கள் நடத்தினர். பலர் உண்ணு நோன்பினைக் கடைப்பிடித்தனர். இருப்பினும் அடுத்த ஆண்டுத் தொடக்கத்தில் விசாரணை ஆரம்பமாயிற்று. தான் எவ்விதக் குற்றமும் செய்யவில்லையென்று, இம்முறையும் ராகோசி வன்மை யாகப் பேசி வாதாடினர். பயன் என்ன? குருடன் கையில் கிடைத்த கோமேதகம் குப்பையில் புரளாது மார்பிலா புரளும் ! அதுபோல் அரக்க மனம் படைத் தோர் அறம் கூறுவோராக அமர்ந்தால் இரக்கம் எங்கே தலை காட்டும் ? நீதி மன்றத்தில் ராகோசி நிகழ்த்திய வீரவுரை என்றும் மறக்கற் பாலதன்று. a அதன் சுருக்கம் கீழே தரப்படுகின்றது. “ஹங்கேரி நாட்டின் வரலாற்றிலேயே பொது வுடமை வாதிகள், முதன் முதலில் தங்கள் உரிமை பறிபோகாமலிருப்பதற்காகப் போராடுகின்றனர். நமது தாயகத்தின் விடுதலைக்காகப் போராட்டம் ஏற்பட்டால் நாங்கள் தான் முன்னணியில் நிற்போம். பிற்காலத்தில் வளம் மிகுந்த வயல் வெளிகளை யெல் லாம் எல்லா நண்பர்களுக்கும் சமமாகப் பங்கிட்டுச் கொடுத்துப், பொருளின் காரணமாய் நம்மிடையே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/42&oldid=739278" இலிருந்து மீள்விக்கப்பட்டது