பக்கம்:அறிவியற் சோலை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆதலின் அவர்களது விளையாட்டெல்லாம் கொடிய விலங்குகளை வேட்டையாடிக் கொல்வதிலும், காட்டுப் புனங்களிலே காவல் புரியும் கன்னிப் பெண்களை அச்சுறுத்தும் யானை, புலி முதலியவற்றைக் கொன்று பின்னர் அப்பெண்களிடம் அன்பு காட்டுவதிலுமே வளர்ந்தது. மேலும் வீரர்கள் புலிகளைக் கொன்று தங்கள் வீரத்திற்கு அறிகுறியாகக் கொணர்ந்த புலிப் பற்களை மகளிர் மகிழ்ச்சியுடன் அணிந்து கொண்டனர். இப் பழக்கமே நாளடைவில் தாலி கட்டிக்கொள்ளும் வழக்கமாயிற்றென்று பலர் கருது கின்றனர். குறிஞ்சி நிலத்துப் பெண்கள் ஓங்கி வளர்ந்த மரங்களில் பின்னியிருக்கும் வலிய கொடிகளை முறுக்கி அவைகளில் ஊஞ்சலாடுவதையும், பாறை களில் இயற்கையாகக் காணப்படும் குழிகளில் தினையைப் பெய்து தம் கணவர் வேட்டையாடிக் கொணர்ந்த யானைத் தந்தத்தை உலக்கையாகச் கொண்டு, வள்ளை ' என்ற பாட்டைப் பாடிக் குத்து வதையும், தங்களது விளையாட்டுக்களாகக் கொண்டி ருந்தனர். மேலும் சுனை நீரைக் குடைந்து விளையாடு வதிலும், அழகொழுக விழும் அருவி ஆடுவதிலும் மலையெதிர் கூவிக் கேட்பதிலும், பலநிறப் பூக்களால் மாலை தொடுத்து அணிந்து கொள்வதிலும் தமிழ்ப் பெண்கள் பெருமகிழ்வு கொண்டனர். அருமையான மாலைகளையும் தழைகளையும் தொடுத்துத் தருவதே முதன் முதல் தமிழர்கள் தங்கள் அன்பினைக் கூறும் வாயிலாக இருந்தது என்பதை நாம் இங்கு குறிப்பிடா மல் இருக்க முடியாது. சிறு வீடு கட்டி விளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/50&oldid=739287" இலிருந்து மீள்விக்கப்பட்டது