பக்கம்:அறிவியற் சோலை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 அறிவியற் சோலை S S S S --- _ பெருந்துயர அ.ை வோரையும் கண்டு கலங்கி கண்ணினுமினிய மனைவியையும், அன்புக் குழந்தை யையும் துறந்த புத்தர் பெருமான் ஒரு கன்னத்தில் அடித்தால் மற்ருெரு கன்னத்தையும் திருப்பிக் காட்டு என்று அருளுபதேசம் செய்த ஏசுபெருமான் ; அடிமைகளின் ஆருத் துயரை அகற்ற அரும் பாடு பட்டு அப்பணிக்காகவே தன் ஆவியைப் போக்கிய அரசியலறிஞர் ஆபிரகாம் லிங்கன் , அன்பின் உருவமாகிய அண்ணல் காந்தி தன் கூடாரத்தில் புரு கூடுகட்டி முட்டையிட்டிருப்பதைக் கண்டு தன் ஊர் திரும்பாது, முட்டைகள் குஞ்சுகளாகி, குஞ்சுகள் பறந்து செல்லும் திறன் பெறும் வரை இருந்து பின்னர்க் கூடாரத்தைப் பிரித்துச் சென்ற வீரர் அம்ரு. இப்னுலாஸ், இவர்களைப் போன்ற தலைசிறந்த பெரியார்களது வரிசையிலே வைத்து எண்ணப்படு கின்ற அளவிற்குப் பாரி உயர்ந்து விளங்குகின்ருன். ஆல்ை இவன் இவர்களையெல்லாம் ஓரளவிற்கு வென்றுவிட்டான் என்றுதான் கூறவேண்டும். வாடிய கொடியைக் கண்டு ஒருவனது உள்ளம் இரங்குமேயானுல், அவனது உள்ளம் வானினும் மிக உயர்ந்து விளங்குகின்றது என்றுதான் கூற வேண்டும். இத்தகைய உணர்வு மயமான வாழ்க் கையை உடையவர்கள்தாம் பாரியின் இந்தச் செய் கையைப் படம் பிடித்துக் கா ட்டியுள்ளனர். இவ்வாறு உணர்வின் எல்லையை மக்கள் நன்கு பதித்தனர். இந்நிகழ்ச்சியைக் கூறவந்த நத்தத்தனுர், சிறு வி முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய பற ம்பிற் கோமா ன் பாரி ' என்று சிறுபாற்ைறுப் படையில் செவ்விய முறையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/66&oldid=739304" இலிருந்து மீள்விக்கப்பட்டது