99
சுேற்றுவதற்கும், சூடாக்குவதற்கும், எஃகினை வெட்டுவதற்கும் பயன்படுகிறது
bleaching : (மர. வே.) நிறமகற்றுதல் : ஆக்சாலிக் அமிலம் போன்ற வதியியல் பொருள்களின் துணையால் வண்ணம் போக்குதல் அல்லது வெண்மையாக்குதல்
bleaching powder : வெளுப்புக்காரம் : குளோரின், சுண்ணம், கால்சியம் குளோரைடு (CaOCl2) ஆகியவற்றினாலான பொருள். இதனை சுண்ணக் குளோரைடு என்றும் கூறுவர். இது துணிகளை வெளுக்கப் பயன்படுகிறது
bleed : (தானி.) கசிவமைப்பு : நீரியல் தடுப்பு அமைப்பிலிருந்து திரவத்தை வடித்தெடுப்பதற்கான அமைபபு
bleeder : கசிவு வடிப்பான் : இது ஒரு சிறிய வடிகுழாய். ஒரு பக்க வழி ஒரதரையும் இவ்விதம் கூறுவர்
bleeding : (மர. வே.) கசிவு மெருகு : சீமை நூக்கு போன்றவற்றில் அவலரக்கு போன்ற விரைவாக உறையும் பொருள்களைக் கரைத்து மெருகேற்றும் பொருள்
blemish : கறை : ஒரு மேற்பரப்பினை களங்கப்படுத்துகிற ஒரு கறை அல்லது களங்கம்
blending : (குழை.) கலப்பு : ஒரு வார்ப்பட அமைப்புப் பொருளில் எல்லாத் துகள்களும் ஒரு சீராகப் பகிர்ந்தமையுமாறு பல்வேறு அமைப்பான்களை எந்திர முறையில் கலவை செய்தல். நிலைமைகளைப் பொறுத்து உலர்கலப்பு அல்லது ஈரக்கல்ப்பு என அழைக்கப்படும்
blimp : (வானூ.) (1) சிறு வேவு விமானம்
(2) ஓசைத்தடை : பேசும்படத்தில் ஒலிப்பதிவுக் கருவிக்குரிய ஒசைத் தடைக் காப்புடைய சாதனம்
blind : மறைதிரை : ஒளியை அல்லது பார்வையை மறைக்கிற ஒரு திரை அல்லது தடுப்பான்
blind coal : அழலில் நிலக்கரி : அழல் இல்லாமல் எரியும் நிலக்கரி வகை
blind forces : இயற்கையாற்றல்கள்
blind flying : நிலங்காணாது பறத்தல் : நிலங்காணாது அல்லது சமிக்கைக் குறிகள் கேளாது பறத்தல்
blindgut : (உயி.) குடல்வால் : குடல் முனை
blind hole : முட்டுத் துவாரம் : முழுவதுமாக ஊடுருவிச் செல்ல முடியாதபடி ஒரு பக்கம் முடியுள்ள துவாரம். இது இருபுறமும் திறப்புடைய துவாரத்திலிருந்து வேறுபட்டது
blind mortise and tenon : (மர. வே.) முட்டுத்துளைச் சட்டம் மற்றும் பொருத்துமுளை : ஒரு துளைச் சட்டத்துடன் பொருத்தப்பட்டுள்ள ஒரு குறுகிய பொருத்து முளை. இது துளையினுள் முழுமையாகச் செல்லாது. அதனால் அதன் மறுமுனை வெளியில் தெரியாது
blind tooling : மழுங்கு கருவி : புத்தக மேலட்டைகளில் மெருகிடாமல் அல்லது வண்ணமிடாமல் அழுத்தம் செய்து அலங்கார வேலை செய்தல்
blinker light : (வானூ.) வேன்ளொளி விளக்கு : நிமிடத்திற்கு 20 முறை வெள்ளொளி காட்டும் விளக்கு
blip : (விண்.) சேனியக்கச் சைகை : சேணியக்க மானியின் திரையில் காணப்படும் பொருளின் வடிவம்