பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

Carburetor float : (தானி. எந்.) : எரி-வளி கலப்பி மிதவை . இது காற்றுப் புகாத ஒரு உலோகக் கொள்கலம். இது எரி-வளி கலப்பிக் கலத்தில் எரிபொருளின் மீது மிதந்து கொண்டிருக்கும். இது பிரதான எரிபொருள் குழாயிலிருந்து பெட்ரோல் பாய்வதைக் கட்டுப்படுத்துகிறது

Carburizing : ஏரி-வளி : இரும்பை ஆதாரமாகக் கொண்ட உலோகக் கலவைகளை, கார்பன் போன்ற பொருள்களுடன் இணைத்து உருகுநிலைக்குக் கீழே சூடாக்குவதன் மூலம் கார்பனுடன் இணைத்தல்

Carburizing flame : ஏரி-வளி கலப்புப் பிழம்பு : வாயுப் பற்ற வைப்புப் பிழம்பு. இதில் நடு நிலைப் பிழம்பினை உண்டாக்குவதற்குத் தேவைப்படுவதைவிட அதிகமான கரிய எரி வாயு அடங்கியிருக்கும்

Car card : கார் விளம்பரம் : கார்கள், பேருந்துகள் முதலியவற்றில் பயன்படுத்தப்படும் விளம்பரங்கள்

carcase : கார் சட்டம் : வீடு கப்பல் முதலியவற்றின் கூண்டுச் சட்டம்

carcinogen : (நோயி.) புற்றுத் தூண்டு பொருள் : புற்று நோய் வளரத் தூண்டுதல் செய்யும் பொருள்

Carcinoma : (நோயி.) எலும்புத் தசைப் புற்று : எலும்புத்தசை, உயிரணுக்கள், உள்ளுறுப்புகள் ஆகியவற்றில் உண்டாகும் புற்று நோய், இதில் சுற்றுப்புறத் திசுக்களைப் புறத்தே தள்ளிவிட்டு, அதில் புற்று தானே வளர்கிறது. இதனால் தாறுமாறான தசை வளர்ச்சி உண்டாகிறது

cardboard : (அச்சு.) தாள் அட்டை : தரங்குறைந்த கனத்த தாள் முதல் சீட்டுகள் வெட்டி எடுப்பதற்கான கெட்டித்தாள் வரைப் பல்வேறு கனத்த விறைப்பான காகித அட்டைகளைக் குறிக்கும் சொல்

card compass : (வானூ.) முகப்புத் திசைகாட்டி : ஒருவகை காந்தத் திசைகாட்டி. இதில், சுழல் முளை மீது திருகி இயங்கும் அட்டையுடன் இணைந்த ஒரு காந்தத் திசை காட்டி. இந்த அட்டைகளில் திசைகள் குறிக்கப்பட்டிருக்கும்

card-cut : முகப்புச் சித்திரைவேலை : சீன பாணியிலான் ஒருவகை பின்னல் வேலைப்பாட்டமைப்பு

carding : சிக்கெடுப்பு : சணல் கம்பளி இழைகளை நூற்பதற்கு முன்னர் அவற்றிலுள்ள சிக்கினை எடுத்து ஆயத்தம் செய்தல்

cardioid : (மின்.) நெஞ்சுப்பை வளைவு : நெஞ்சுப்பை வடிவான விளைவு

Carnot’s cycle : கார்னாட் சுழற்சி : துல்லியமான பொறிச் சுழற்சி ஆல்லது தொடர் வெப்ப மாறுதல். இந்த முறையினை கார்னாட் என்ற ஃபிரெஞ்சு விஞ்ஞானி கண்டுபிடித்தார்

Carnot's principle : (இயற்.) கார்னாட் தத்துவம் : ஒர் அனல் பொறியினால் செய்யப்பட்ட வேலையின் அளவு, அதன் வெப்ப அளவை மட்டுமே பொறுத்தது. இது பயன்படுத்தப்படும் இடைக்காரகியின் சார்பற்றது

Carotid artery : (உட.) தலைத் தமனி : தலைக்குக் குருதியைக் கொண்டு செல்லும் இருபெரும் தமனிகளில் ஒன்று

Carpentry : தச்சு வேலை : கட்டிடங்கள், படகுகள்