பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21

சாய்ந்த எழுத்துக்கள்கொண்டிருக்கிற ஒரு கட்டுப்பாட்டும் பரப்பு

aeration: (குளி.) காற்றூடல்: காற்றோட்டம் மூலமாகக் குளிர்விக்கும் கலவை செய்யும் செய்முறை

aerodynamic center, wing section: (வானூ.) வளியியக்க மையம், சிறகுப் பகுதி: நிரல் கோட்டின் நாண் மீது அல்லது அதனருகே அமைந்துள்ள ஒரு மையம். இது, விமானச்சிறகின் முன்விளிம்பிற்குப் பின்னருள்ள நாணின் நீளத்தில் ஏறத்தாழ கால் பகுதி இருக்கும். இந்த மையத்தைச்சுற்றி, நெம்பு திறன் குணகம் நடைமுறையில் மாறாமலே இருக்கும்

aerodynamics: (வானூ. ) வளியியக்கவியல்: இயங்கும் வளிமங்கள் அவற்றின் எந்திரவியல் விளைவுகள் ஆகியவை பற்றிய அறிவி யல் பிரிவு

aerodynamic volume: (வானூ.) வளியியக்கக் கன அளவு: ஒரு வான் கூண்டின் பிதுக்கப் பகுதிகள் உட்பட அதன் மொத்தக் கன அளவு

aerodyne: (வானூ): காற்றினும் எடைமிக்க வான் கலம்: பறக்கும் போது முக்கியமாக வளியியக்க விசைகளிலிருந்து பறக்கும் ஆற்றலைப் பெறும் வானூர்தியைக் குறிக்கும் ஒரு பொதுவான சொல்

aeroelasticity: (விண்.) மிகுவிசை வான்கல அதிர்வியக்கம்: நெகிழ்திறன் வாய்ந்த பொருள்களின்மீது வளியியக்க இயற்பியல் விசைகளின் விளைவு

aerogroph: வண்ணப்பூச்சு தூரிகைக்குப் பதிலாக வண்ணத்தைப் பீச்சியடிக்கும் கருவி

aerolite: (உலோ.) விண் வீழ்கல்: ஏரோலைட்: 96% அலுமினியம் அடங்கிய ஓர் அலுமினிய உலோகக் கலவை.வீதஎடைமானம் 2.74. வானூர்தியும் தானியங்கிகளின் உறுப்புகளும் தயாரிக்கப் பயன்படுகிறது

aeronautics: வானூர்தியியல்: வானூர்தி பறத்தல் தொடர்பான அறிவியல்

aerosol: (குளி.) தூசிப்படலம்: காற்றில் மிதக்கும் சிறு சிறு துகள்கள். எடுத்துக்காட்டு: தூசி, மூடுபனி, புகை

aerospace: (விண்.) விண்வெளி: பூமியின் மேற்பரப்புக்குப் புறத்தேயுள்ள அகன்று விரிந்த பிரம்மாண்டமான ஊடகம்

aeroforces: (விண்.) விண்வெளி விசைகள்: இராணுவ நோக்கங்களுக்காக விண்வெளியில் செயற்படுகிற ஊர்திகள் அனைத்தையும், பொருத்தமான இடங்களில் ஆயுதங்களையும், அவற்றைக் கையாளும் இயக்குநர்களையும் இது உள்ளடக்கும்

aerospace vehicle: (விண்.) வான்வெளிக் கலம்: வாயு மண்டலத்திலும் விண்வெளி மண்டலத்திலும் இயங்கக்கூடிய ஒரு கலம். வான்வெளிச் சூழ்நிலையில் தானாகவோ மனிதர் இயக்கியோ இயங்குகிற ஊர்தியையும் குறிக்கும்

aetiology, etiology: (நோயி.) நோய்முதல் ஆய்வியல்: நோய்க்கான காரணம் பற்றி ஆராயும் துறை

afferent nerve: (உட.) உணர்ச்சி நரம்பு: மூளைக்கும், தண்டுவடத்திற்கும் உணர்ச்சிகளைக் கொண்டு சேர்க்கிற நரம்பு

aerostat: (வானூ.) வான்கூண்டு: வான்கலம் அல்லது பலூன்