பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

286

floor drain : (க.க;கம்.) தள வடிகால் : தளங்களிலிருந்து வடிகால்களுக்குள் மழைநீர் வடிவதற்கு அமைக்கப்படும் அமைப்பு

floor molding : (வார்.) தள வார்ப்படம் : தளத்தில் வார்ப்படங்கள் செய்வதற்கான முறை. இது மேசை வார்ப்படத்திலிருந்து வேறுபட்டது. இது பெரிய அளவு வார்ப்பட வேலைகளுக்குப் பயன்படுகிறது

floor plan : (க.க) தள அமைப்புப் படம் : ஒரு கட்டிடத்தின் நீள அகலங்களையும், அவற்றில் அடங்கும் அறைகளின் நீள அகலங்களையும் காட்டும் வரைபடம். ஒவ்வொரு தளத்திற்கும் தனித்தனி அமைப்புப் படம் வரையப்படும்

flore lated : மலர் உரு ஒப்பனை : மலர் உருவரைகளால் ஒப்பனை செய்தல்

floatation gear : (வானூ.) மிதவைப் பல்லிணை : தரை விமானம் நீரில் இறங்குவதற்கும், நீரின் மேற்பரப்பின் மீது மிதக்கச் செய்வதற்கும் அனுமதிக்கும் நெருக்கடி நிலைப் பல்லிணை

flowering dogwood : (தாவ.) மலர் மரம் : இலையுதிர் பருவத்தில் தண்டும் இலைகளும் சிவப்பாக மாறவல்ல ஒரு மரவகை. இந்த மரம் மிகக் கடினமானது. குளிர்ப் பந்தாட்டக் கோல், கருவி கைபிடிகள் முதலியன தயாரிக்கப் பயன்படுகிறது

fluctuation : ஏற்ற இறக்கம் : அலையலையாக எழுந்து தளர்ந்து ஊசலாடுதல்

fluctuating current : (மின்.) நிலையிலி மின்னோட்டம் : சீரற்ற இடைவெளிகளில் அளவு மாற்றமடையும் மின்னோட்டம்

flue : புகை போக்குக் குழல் : வெப்பக்காற்று, புகை முதலியவற்றை வெளிக்கொண்டு செல்வதற்கான குழாய்

fluid : நீர்மம் : கன அளவு மாறாமல் வடிவத்தை எளிதில் மாற்றி விடக்கூடிய நெகிழ்ச்சிப் பொருள். இதிலுள்ள துகள்கள் இடம் பெயர்ந்து வடிவத்தில் மாறுமே யொழிய, தனியாகப் பிரிந்து விடுவதில்லை

fluid drive : (தானி.) நீர்ம வழி இயக்கம் : அரை நீர்மங்களின் வழி ஆற்றல் இயங்கச் செய்யும் முறை. உந்து வண்டியின் சமனுருள் சக்கரத்தில் இது பயன்படுகிறது

fluid friction : (எந்.) நீர்ம உராய்வு : ஒரு நீர்மத்தின் துகள்கள் இயங்கி நீர்மத்தின் புறப்பரப்புகள் திடப்பரப்பினைத் தொட்டுக் கொண்டிருக்கும்போது, நீர்மத் தொகுதி தனக்குள் பல்வேறு அடுக்குகளாகப் பிரிகிறது. இந்த அடுக்குகள் ஒன்றன்மீது ஒன்று நகரும் போதும் ஏற்படும் உராய்வு மூலம் ஏற்படும் உரசல் விளைவு 'நீர்ம உராய்வு' எனப்படும்

fluidity : (குழை.) நீர்மத் திறன் : இதனைக் குழைமத் திறன் என்றும் கூறுவர்

fluid pressure : நீர்ம அழுத்தம் : நீர்மத்தில் அழுத்தமானது. எல்லாத் திசைகளிலும் செலுத்தப்படுகிறது. இவ்வாறு செலுத்தப்படும் அழுத்தம், அனைத்துத் திசைகளிலும் சம அளவிலும், மேற்பரப்பின் பரப்பளவிற்கு நேர்விகித அளவிலும் இருக்கும்

fluorescent lamp : (மின்.) உமிழொளி விளக்கு : மின் ஆற்றலின் அளவு மிகாமல் நிறை ஒளி தரும் விளக்கமைவு. இது பாதரசச் சுடர்த் தத்துவத்தின்படி செயற்படுகிறது. பாதரசச் சுடர் உமிழும்