பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
305

தட்டுகளை வைப்பதற்குப் பகுதி பகுதியாக பிரிக்கப்பட்ட அடுக்கு

gallic acid: (வேதி.) காலிக் அமிலம்/காழகிக் காரம்: [C6H2(OH)8COOH]: மரவகைக் கரணைலிருந்து எடுக்கப்படும் மணிக்கார வகை. இது நிறமற்றதாக அல்லது இலேசான மஞ்சள் நிறத்தில் இருக்கும். படிக ஊசிகளாக அல்லது பட்டகைகளாக அமைந்திருக்கும். இதன் வீத எடைமான 1.694: உருகுநிலை 222°C முதல் 240°C வரை. ஒளிப்படக் கலையிலும், மை, சாயம், மருந்து முதலியன தயாரிக்கவும் பயன்படுகிறது

galling: (உலோ.) ஒட்டுதல்: உலோகங்கள் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்பு கொள்ளும் போது அவை ஒன்றையொன்று பற்றிக் கொள்ளுவது உலோகங்களின் இயல்பு. உராய்வுப்பொருள் இன்றி அழுத்தத்தின் கீழ் இல்வாறு ஒன்றையொன்று பற்றிக்கொள்ளும் தன்மையுடைய பொருள் ஒட்டுப் பொருள் எனப்படும்

galli-pot: சாடி: தைலம் வைக்கப் பயன்படும் சிறு பளபளப்பான மட் பாண்டம்.

gallon: காலன்: நீர்மப் பொருள்களை, அளவிடுவதற்குரிய முகத்தலளவை அலகு. 4 குவார்ட்ஸ், 8 பிண்டுகள், 231 கன அங்குலம் அளவுடையது

galloon : கட்டு இழைக்கச்சு : ஆடை விளிம்பில் இணைக்கப்படும் கசவாலான இழைக்கச்சு

galvanic action (வேதி) மின்னியக்க வினை : நேர்மின் உலோகங்களுக்கும், எதிர்மின் உலோகங்களுக்குமிடையிலான இயக்க வினை. இதன் காரணமாக நேர் மின் உலோகம் வீணாகிறது. குறிப்பாக இரும்பும், செம்பும், அல்லது பித்தளையும் இரும்பும் அமிலங்கலந்த நீரில் ஒன்றாக இருக்கும்போது இந்த வினை நடைபெறுகிறது

galvanic corrosion : (உலோ ) மின்னியக்க அரிமானம் : அதிகம் துருப்பிடிக்காத உலோகங்களுடன் இணைக்கப்பட்டிருக்கும் போது இன்னொரு உலோகம் விரைவாக அரித்தழிக்கப் படுதல். எடுத்துக்காட்டாக எஃகும் செம்பும் கடல் நீரில் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்குமாயின், எஃகு விரைவாக அரிமானத்திற்குள்ளாகும்; செம்பு பாதுகாப்பாக இருக்கும்

galvanize : நாகப்பூச்சு : இரும்புக்கு துத்தநாகத்தால் மேற் பூச்சிடுதல். இது மின்னியல் செய்முறையால் செய்யப்படுவதில்லை. உருகிய துத்தநாகத்தில் இரும்பை அமிழ்த்து எடுத்தாலே இரும்பில் துத்தநாகப்பூச்சு ஏற்பட்டுவிடும்

galvanized iron: நாகப்பூச்சு இரும்பு: துருப்பிடிக்காமலிருப்பதற்காக துத்தநாகத்தால் மேற்பூச்சு பூசப்பட்ட இரும்பு. இதில், இரும்பினைச் சுத்தம் செய்து உருகிய துத்தநாகத்தில் அமிழ்த்து எடுக்கப்படுகிறது.இது மின்னியல் செய்முறையால் நடைபெறுவதில்லை

galvanized sheets : நாகப்பூச்சுத் தகடுகள் : துத்தநாகத்தால் மேற் பூச்சு பூசப்பட்ட இரும்புத்தகடுகள். இது 51செ.மீ.முதல் 76செ.மீ. ஆகலமும் 244செ.மீ.நீளமும் உடையதாக இருக்கும்

galvanizing : நாகப்பூச்சிடுதல்: இரும்பு துருப்பிடிக்காமல் துத்த நாகத்தால் மேற்பூச்சு பூசுதல்

galvanometer : (மின்) மின்னோட்டமானி : சிறிதளவு மின்னோட்டத்தையும் காட்டுவதற்கான ஒரு கருவி