பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
333

hard water; கடின நீர்: கால்சியம், மக்னீசியம் கூட்டுப்பொருட்கள் பெருமளவு கரைந்துள்ள நீர்

hardwood : வயிரமரம் : இலையுதிர்க்கும் மரவகைகளின் வயிரம் பாய்ந்த கட்டை, கருவாலி வாதுமை, அசோகு, புங்கம் போன்றவை வயிரம் பாய்ந்த மரங்கள்

hardy : கொல்லன் பட்டடை : உலோகத்தை வெட்டும்போது கீழே ஆதாரமாக வைத்துக்கொள்வதற்கான கெட்டியான இரும்புத் தடை

hardy hole : பட்டடைத் துவாரம்: பட்டடைக் கல்லிலுள்ள சதுரத் துவாரம். இது பட்டையின் தண்டுப்பகுதியைத் தாங்கிக்கொள்கிறது

harmonic analysis: (மின்.) கிளையலைப் பகுப்பாய்வு : சிக்கலான கிளையலைகளைப் பகுப்பாய்வு செய்தல்

harmonic frequency : (மின்.) கிளையலை அலைவெண் : ஓர் அடிப்படை அலைவெண்ணின் ஒரு மடங்காகவுள்ள எடுத்துக்காட்டு: அடிப்படை அலைவெண் 1000Kc என்றால், இரண்டாவது கிளையலை 2x1000KC அல்லது 2000Kc ஆகும்; மூன்றாவது கிளையலை 3 x 1000Kc அல்லது 3000Kc

harmonize : இணக்குவிப்பு : பல்வேறு உறுப்புகளை இணக்கமாக பொருத்துதல்

harness : (மின்.) காப்புக் கவசக் கம்பி இணைப்பு: கம்பிகள் அல்லது மின் கம்பிவடங்கள் ஒரே கட்டாகக் கட்டப்பட்டு, குழுமங்களாக இணைக்கப்பட்ட ஓர் இணைப்புக் குழுமம்

hasp: கொண்டி: கதவில் கொளுவி மாட்டிப் பூட்டுவதற்குரிய கொளுவி

hatchet copper: (உலோ.வே.) கோடரிச் செம்பு : கைப்பிடிக்குச் செங்குத்துக் கோணத்தில் பொருத்தப்பட்டுள்ள தலையுடைய, ஒரு கோடரி போன்ற வடிவமைந்த பற்றாசுச் செம்பு

hatchet irons : (கம்.) கோடரி இரும்பு: ஒரு தனிவகையான பற்றாசு இரும்பு

hatchet stake : கோடரிமுனை : வெள்ளீயத் தகடுகளை வளைப்பதற்குக் கொல்லர்கள் பயன்படுத்தும் ஒரு கருவி

hatchings : நிழல் வண்ணம் : நேர்த்தியான கோடுகள் மூலம் நிழல் வண்ணங்காட்டுதல். இதில் 45° கோணத்தில் இணைக்கோடுகள் அல்லது குறுக்குக் கோடுகள் பயன்படுத்தப்படும்

hatch way: (க.க.) தளப்புழை வாய்: சரக்குகளை இறக்குவதற்காகத் தளத்திலுள்ள புழை, நிலத் தளத்திலுள்ள புகுவாயில், சுவரிலுள்ள திட்டிவாயில்

haunch : உட்சரிவு: வளைவு மாடத்தின் உட்பக்கச் சரிவு

haunched mortise and tenon : (மர.வே.) உட்சரிவுத் துளைச் சட்டம்: துளைச்சட்டத்தின் அகலம், அதன் நீளத்தின் பகுதிக்குப் பதிலாகக் குறைக்கப்பட்டு, துளைப் பொருத்து வெட்டப்பட்டுச் செய்யப்படும் இணைப்பு

hawk: (குழை.) பூசுதட்டு : காரை பூசுபவரின் கைப்பிடியுள்ள சதுரப்பலகை

hawser-laid rope: நங்கூரகம்பி வடம் : மூன்று புரிகள் ஒன்றாகத் திரிக்கப்பட்ட வடம்

haze : (குழை.) மங்கல் படலம் : ஒளி ஊடுருவக்கூடிய பிளாஸ்டிகிலுள்ள மங்கலான தோற்றம்