பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

356

தல் : நூல்களின் பக்கங்களில் அலங்கார வண்ண மெருகிடுதல்.

iliuminating gas: (வேதி) ஒளிரும் வாயு : (1) நிலக்கரி, கரியஞ் சேர்ந்த நீர்வாயுக்கள், அவற்றின் பல்வேறு கலவைகள் ஆகியவை

(2) எண்ணெய் வாயுக்களின் பல்வேறு வகைகள்

(3) அசிட்டிலின் வாயு, கேசோவின் வாயு மற்றும் உற்பத்தி வாயு ஒளிரும் நோக்கங்களுக்கு முக்கியமானது. எரிபொருள் மற்றும் விசை வாயு வகையில் உற்பத்தி வாயு மிக முக்கியமானது

illumination: ஒளிர்வித்தல் : ஒளிரச் செய்த நிலையிலுள்ள

illustrate : பட விளக்கம் : உரு வரைப் படங்கள் மூலம் விளக்கம் செய்தல். எடுத்துக்காட்டாக, ஒப்பீடுகள் போன்றவை

ilmenite : இல்மனைட்: டைட்டேனியம் தனிமத்தின் கனிமம் கருநிறமுடையது. தென்கிழக்கு அமெரிக்காவில் நீண்டகாலம் உழைக்கக் கூடிய வெண்மை நிற வண்ணப்பொருள் தயாரிக்க முக்கியமாகப் பயன்படுகிறது

image : உருக்காட்சி : தொலைக்காட்சியில் ஒளிப்படக் குழாயில் ஒருமுகப்படுத்தப்படும் படம் ஆல்லது காட்சி. படக்குழாயில் மின்னணுவியல் முறையில் பிரதிபலிக்கப்படும் படம்

imageorth : மிகு ஒளியுணர்படக் குழாய்: அரைகுறை இருட்டிலும் காட்சிகளைப்படம் பிடிக்கக்கூடிய மிகுந்த ஒளியுணர் திறனுடைய ஒளிப்படக் குழாய்

imaginary number : (கணி ) கற்பனை எண் : ஓர் எதிர்மறை எண்ணின் வர்க்கமூலம் உள்ளடங்கிய அளவு அல்லது மதிப்பு. இது உண்மையல்லாதது

imitation embossing : (அச்சு) போலிப் புடைப்புருவம்: புடைப்பு அச்சுப் பரப்பினை உருவாக்கும் முறை. புதிதாக அச்சிட்ட காகிதத்தில் பொடியினைத் தூவி வெப்ப மூட்டும்போது மையுள்ள பகுதிகளில் பொடி இணைந்து கொள்கிறது

immelman turn : (வானூ) இம்மல்மன் சுழற்சி: விமானத்தின் வழக்கமான கரண வளைவின் முதற்பாதியை முடிவுறுத்தும் இயக்கமுறை. கரண வளைவின் உச்சியில் தலைகீழ் நிலையிலிருந்து விமானத்தைப் பாதியளவு சுழ்ற்சி சமநிலைக்குக் கொண்டு வருதல். இதனால், உயரம் கூடும். அதே சமயத்தில் 180° அளவுக்குத் திசை மாற்றமும் கிடைக்கிறது

immerse :மூழ்குநிலை: நீரில் முற்றிலும் மூழ்குவித்தல் நீர்மத்தில் உள் அமிழ்த்துதல்

immersion heater : மூழ்கு வெப்பூட்டுக் கருவி : நீர்மத்தில் உள்தோய்ந்து நின்று வெப்பூட்டும் மின்கருவி

immobile : இயங்காத : அசையாத, ஒரே நிலையில் பொருத்தி வைக்கப்பட்ட

immunological reaction: (உட) தடைகாப்பு எதிர்வினை; மற்றொருவரின் தோல் போன்ற அயல் பொருள்கள் உடலினுள் செலுத்தப்படும் போது, அதை எதிர்ப்பதற்காக எதிர்ப்புப் பொருட்கள் உண்டாகின்றன. இவற்றை தடைக்காம்பு எதிர்வினை என்பர். எடுத்துக்காட்டாக, வேறொருவரின் தோலை உடலில் பொருத்தினால், அந்தத் தோல் வளர்வதில்லை

impact: மோதல் விளைவு: மோதித் தாக்குதலின் விளைவு

impact strength : (குழைவு) மோதல் விளைவு வலிமை : சோ