பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
385

படுகிற ஆற்றல் தாக்கங்களுக்குமுள்ள தொடர்புகளைப் பற்றிய ஆய்வியல்

kingpin : (தானி. எந்.) முதன்மைப் பெருமுளை : இது எஃகினாலான ஒரு முளை அல்லது தண்டு. இது கடினமானதாகவும் வேண்டிய வடிவளவுக்குத் தேய்த்து உருவாக்கப்பட்டதாகவும் இருக்கும். அச்சுத்தண்டுடன் இயக்கு இணைப்புக்கோலினை இணைத்துத் தாங்கி நிற்பதற்கு இது பயன்படுகிறது. இது முன்புறச் சக்கரங்கள் இடமும் வலமும் தாராளமாக இடமளிக்கிறது

king post : (க.க.) நடுமரம் :கூரைச் சட்டத்தில் கைம்மரங்களின் கீழ் முனைகளை இணைக்கும் கட்டையின் மையத்திலிருந்து செங்குத்தாக உச்சி வரை மேலெழும்பும் கம்பம்

kink :' (பட்.) கோட்டம் : அடிப்பதால் அல்லது அழுத்துவதால் உலோகத் துண்டில் உண்டாக்கப்படும் வளைவு அல்லது கோணம்

kip : (பொறி.) கீப் : பொறியியல் துறையில் பயன்படுத்தப்படும், ஓராயிரம் பவுண்டு எடையைக் குறிக்கும் சொல்

kirchhoff's law of voltages : (மின்.) கிர்ச்சாஃப் மின்னழுத்த விதி : "ஓர் எளிய மின்சுற்று வழியில், ஒரு மின்சுற்றுவழியைச் சுற்றியுள்ள மின்னழுத்தங்களின் இயற் கணிதக் கூட்டுத்தொகை பூச்சியம்" என்னும் விதி

kit : கருவிப் பெட்டி : தொழிலாளர்கள் தங்கள் கருவிகளை வைத்திருக்கும் பெட்டி

kite ballon : (வானூ.) வேவுக் கூண்டு : படைத்துறையினர் வேவு பார்ப்பதற்காகப் பயன்படுத்தும் பறக்கும் கூண்டு

kin dry : (மர.) வெப்ப உலர்த்தல் : வெட்டு மரங்களைச் செயற்கையாகப் பக்குவப்படுத்தும் முறை. இதில் வெட்டு மரத்தை ஒரு நீராவி அறையில் இட்டு ஒரே மாதிரியாகப் பூரிதமாக்கி, பின்னர் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு வெப்பத்தின் மூலம் உலர்த்துதல்

knee : (1) முழங்கால் மூட்டு : வடிவத்தில் அல்லது நிலையில் முழங்கால் போன்ற அமைப்பு (2) இறுக்குத் துண்டு : அச்சுத் துறையில் அச்சுக்கோப்புச் சட்டத்தின் வரம்புகளுக்குள் எந்த அளவுக்கும் அச்செழுத்துக்களை அடுக்கி அடக்குவதற்குப் பயன்பட வேண்டியவாறு அமைத்திடக் கூடிய இறுக்குத் துண்டு

knee-action wheels : (தானி.) கீல் மூட்டுச் சக்கரங்கள் : உந்து ஊர்திகளில் தனித்தியங்குகிற முன் சக்கரங்கள். இதில்,மனிதன் முழங்கால் முட்டினைப் போல் இயங்குமாறு சக்கரங்களுடன் இணைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கும்

kneeler : திசைமாற்றுக் கல் : திசை மாற்றத்திற்கு வழி செய்யும் வகையில் வெட்டப்பட்ட கல்

knife : கத்தி : வெட்டு முனையுள்ள கைப்பிடி பொருத்தப்பட்ட ஒரு வெட்டுக் கருவி

knife-blade fuse : (மின்.) கத்திமுனை உருகி : ஒரு கத்தி முனை விசையின் அலகுகள் போன்ற வடிவுடைய நுனி இணைப்புகள் கொண்ட ஓர் உருகி

knife switch : (மின்.) கத்தி முனை விசை : இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட சமதளப் பரப்பு கிளிடையே அல்லது தொடர்பு அலகுகளிடையேயுள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அலகுகளின் தொடர்பு மூலமாக ஒரு மின் சுற்றுவழியை முற்றுவிக்