பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
43

அதன் தொலைவு ஆகிய இரண்டையும் பொறுத்ததாகும்

ஒரு பொருள் எந்தக் கோணத்தில் கண்ணில்படுகிறதோ அந்தக் கோணத்தின் விட்டம் ஆகும். கண்ணிலிருந்து ஓரடி தூரத்திலுள்ள ஒரு வட்டத்தின் கோணவிட்டம் 5° மட்டுமே. நிலவின் கோண விட்டம் 1/2°

angular gears : (எந்) கோண வடிவப்பல்லிணைகள் : நேர் கோணம் அல்லாத வேறு கோணங்களில் இயங்குவதற்கென வடிவமைக்கப்பட்ட சரிவுப் பல்லிணைகள்

angular momentum : கோண இயக்கு விசை: திரும்புகிற ஒரு பொருளின் இயக்குவிசை. இரண்டு பொருள்கள் ஒரே சமயத்தில் சம ஆற்றல்களின் மூலம் நிலைக்குக் கொண்டு வரப்படுமானால் அவை சமமான கோண இயக்குவிசை உடையவையாகும்

angular phase : (மின்) கோணப் படிநிலை: ஓர் ஆதாரக் கோட்டினைப் பொறுத்து ஒரு சுழல் நேறியம் அமைந்திருக்கும் நிலை

angular velocity: (மின்) கோண வேக வீதம் : ஒரு வினாடியில் ஒரு சுழல் நேறியத்தின் வேகம், இது ரேடியன்களில் குறிக்கப்படும்

angular velocity : (எந்) கோண வடிவ வேக வீதம் : ஒரு மையத்தை ஆதாரமாகக் கொண்டு சுழலும் ஒரு பொருளினால் அல்லது புள்ளியினால் ஒரு வினாடி நேரத்தில் வரையப்படும் வளைவரைக்கும் ஆரத்திற்குமிடையிலான விகிதம்

anhidrotics : (உட) வியர்வைத் தணிப்பிகள்

anhydride : (வேதி)நீர் நீக்கிய காடி: ஒரு கூட்டுப்பொருளிலிருந்து நீரை அகற்றி விடும்போது எஞ்சி நிற்கும் பொருள். H2SO4一H2O=SO3

anhydrous : (வேதி) நீரில்லாத : நீர் நீக்கப்பட்ட உலர்ந்தது; வற்றி வதங்கியது

anhydrous ammonia : (வேதி) நீரற்ற அம்மோனியா/நவச்சார ஆவி: குளிராலும், அழுத்தமூட்டுதலாலும் திரவமாக்கப்பட்டுத் தூய்மைப்படுத்தப்பட்ட அம்மோனியா வாயு (நவச்சார ஆவி)

amiline : (வேதி.) அனிலைன்: நிறமற்ற, எண்ணெய்ப் பிசுக்கான கூட்டுப்பொருள் (C6H5NH2) பல்வேறு கீல் எண்ணெய்ச் சாயப் பொருட்கள் இதனை ஆதாரமாகக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. ரப்பர் தொழிலுக்கு இது பயன்படுகிறது

anion : (மின்.) எதிர்மின்மம்: மின் பகுப்பாய்வில், நேர் மின்முனையை நோக்கி நகர்கிற ஓர் எதிர் இயனி (மின்மயத்தூள்)

aniridia :(உட.) விழிச் சுருக்குத் தசையின்மை

anischuria : (உட) சிறுநீரை அடக்க இயலாவண்ணம் கட்டற்ற முறையில் ஒழுகிக் கொண்டிருப்பது

anisotropic : (மின்) திசை மாறு பாட்டுப் பண்பு: ஒரு பொருள் வெவ்வேறு திசைகளில் வெவ்வேறு இயல்புகளைக் கொண்டிருத்தல். எடுத்துக்காட்டாக, திசைமாறு பாட்டுப் பண்புடைய ஒரு படிகம், செங்குத்துக் கோணத்திசையை விட இன்னொரு திசையில் மின்விசை பாய்வதை அதிக அளவில் தடையுடையதாக இருக்கும்