பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/503

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
501

யைச் சுற்றிச் சுழலும் பல்வேறு தாக்கு விசைகளின் இயற்கணிதக் கூட்டுத் தொகையானது, அந்தப் புள்ளியில் அவற்றின் கூட்டுவிளை வாக்கத்திற்குச் சமம்' என்னும் விதி

printer's mark: (அச்சு.) அச்சக முத்திரை : அச்சக வாணிக இலச்சினை அல்லது அடையாள முத்திரை

printing : அச்சிடுதல் : தாள் முதலியவற்றில் எழுத்துகளையும் படங்களையும் அழுத்திப் பதிய வைத்தல்

printing press :அச்சு எந்திரம் : அச்சிடும் எந்திரம். அச்சகம், அச்சிடும் தொழிற்சாலையையும் இது குறிக்கும்

prism: (கணி.) பட்டகை: மூன்று அல்லது மூன்றிற்கு மேற்பட்ட தட்டையான பக்கங்களையுடைய நீள் உருளை உரு

prismatic colours : (வண்.) பட்டகை வண்ணங்கள்: கதிரவன் ஒளியில் அடங்கியுள்ள சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், நீலம். பச்சை முதலிய வண்ண நிறங்கள்

prismatic compass : காட்சிக் கருவி: காட்சியின்போதே திசைக் குறிப்புத் தரும் நில அளவைக் கருவி

prismatic powder : கூழாங்கற் பொடி : அறுகோணப் பிழம்புரு வான் வெடி மருந்துப் பொடி

prismoid: முரண்பட்டகை: முரண் இணைவகப் பக்கங்களையுடைய பட்டகை

process : (தானி.) செய்முறை : விரும்பிய பலனை அல்லது பொருளை உண்டாக்குவதற்கான தொடர் செயல்முறைகள்

process annealing : பதப்படுத்து முறை : இரும்பை ஆதாரமாகக் கொண்ட உலோகக் கலவைகளைக் கட்டுப்படுத்தி ஆறவைத்தல் மூலமோ, நன்கு சூடாக்கி மெல்ல ஆற விடுவதன் மூலமோ கடும் பதப்படுத்தும் முறை

process or chemical metallurgy : செய்முறை அல்லது வேதியியல் உலோகக் கலை : உலோகங்களை உருகவைத்து சுத்திகரிக்கும் முறை

process industries : (தானி.) செய்முறைத் தொழில்: தொடர்ச்சியான செயல் முறைகளைக் கையாளுகின்ற பெட்ரோலியம் மற்றும் வேதியியல் தொழிலைக் குறிக்கும் பொதுவான பெயர்

product ;(பொறி.) உற்பத்திப் பொருள் : தொழில்துறையின் உற்பத்தி செய்யப்படும் பொருள்களின் அளவு

production: உற்பத்தி: (1) உற்பத்தி செய்யும் செயல்முறை (2) உற்பத்தி செய்யப்படும் அல்லது தயாரிக்கப்படும் பொருள் (3) தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களின் அளவு

production basis : சிக்கன உற்பத்தி : மிகவும் சிக்கனமான உத்திகளைக் கையாண்டு உறுப்புகளை உற்பத்தி செய்யும் முறை

production engineer : (பொறி.) உற்புத்திப் பொறியாளர்: உற்பத்திப் பிரிவினைப் பராமரித்து வருவதற்குப் பொறுப்பாகவுள்ள பொறியாளர். மிகத் திறம்பட்ட உற்பத்தி முறைகளைக் கையாளும் வகையில் கருவிகளை இயக்குவதற்கும் கருவிகளை வடிவ்மைப்பதற்கும் இவர் பொறுப்பாக இருப்பார்

productivity : உற்பத்தித் திறன் : ஆள்பலம், மூலப்பொருள்கள் எந்