பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/508

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

'506

pulp board ;(தாள்) கூழ் அட்டை : காகித மரக்கூழ் கலவையிலான கரடுமுரடான அட்டை

pulping :(தாள்.) கூழாக்குதல் : மரம், கந்தைத் துணிகள் போன்ற மூலப் பொருட்களைக் காகிதம் செய்வதற்கான கூழாகச் செய்யும் முறை

pulpit : (க.க.) உரை மேடை: திருக்கோயில் சமய உரை மேடை

pulsating current : (மின்) துடிப்பு மின்னோட் டம் : மின்னோட்ட அளவு ஒரே அளவாக இல்லாமல் ஒரே திசையில் மின்னோட்டம் பாயக்கூடிய நேர்மின்னோட்டம்

pulsation welding (பற்.) துடிப்பு பற்ற வைப்பு: அழுத்தம் கொடுக்காமல் அல்லது மின் முனைகளின் இடங்களை மாற்றாமல் பற்றவைப்பு மின்னோட்டத்தை ஒன்றுக்கு மேற்பட்ட தடவை இடையீடு செய்து தைப்பு முறை பற்றவுைப்பு செய்யும் முறை

pulse-jet engine : (வானூ.) துடிப்புத் தாரை எஞ்சின் : ஒரு வகை அழுத்தத் தாரை எஞ்சின். இதில் உள்ளெரிதல் இடைவிட்டு நடைபெறும். இதனால் தொடர் வெடிப்புகள் மூலம் உந்துகை உண்டாகிறது. இதனை 'துடிப்புத் தாரை' என்றும் கூறுவர்

pulsometer : (பொறி) வளிதீர் குழல் : நீராவியைக் கவான் குழாய் வழி கொண்டு செல்வதற்கான வளிதீர் குழாய். இது பெரும்பாலும் நீருக்கடியில் கடைக்கால் போட உதவும் நீர் புகாக்கூண்டு அமைவிலிருந்து நீராவியைக் காலி செய்வதற்குப் பயன்படுகிறது

pumice : மாக்கல் : மெருகேற்றுவதற்குப் பயன்படும் மாக்கல் வகை. இதனைப் பொடியாக்கிப் பயன்படுத்துவர்

pump: (எந்.)இறைப்பான் : திரவங்களைக் காற்றழுத்த ஆற்றல் மூலம் மேலெழச் செய்யும் விசைக் குழாய்

punch : (எந்.) தமரூசி: தோல், உலோகம், தாள் முதலியவற்றில் துளையிடுவதற்கு எஃகினால் செய்த ஒரு கருவி

punch card ; (தானி.) துளை அட்டை : ஒரு குமூஉக்குறித் தகவல் முறையில தகவல்களைத் துளையிட்டுப் பதிவு செய்வதற்கான அட்டை

punched : (தானி.) துளையிட்ட நாடா : துளையிடுவதன் மூலம் தகவல்கள் பதிவு செய்யப்பட்ட நாடா

punching : துளையிடுதல் : தாள் ,தோல், உலோகம் முதலியவற்நில் தமரூசியால் துளையிடுதல்

punch press : வார்ப்பழுத்துப் பொறி : வார்ப்புத் தாய்ப்படிவ அழுத்தும் பொறி

punctuation : (அச்சு.) நிறுத்தக் குறியீடு : வாக்கியங்களைச் சொற்றொடர்களாகப் பகுத்துக்காட்டுவதற்குப் பயன்படும் நிறுத்தக் குறியீடுகள்

purlin : (க.க.) உத்தர கெடுவிட்டம் : தாங்கணைவுகளுக்கிடையாகவும் கூரை உத்தரங்களுக்கு ஆதாரமாகவும் அமைக்கப்படும் தாக்கமைவுக் கட்டுமானம்

push button: (மின்.) மின் விசைக் குமிழ் : ஒரு சிறிய பொத்தானை அல்லது குமிழை அழுத்திக்கொண்டிருக்கும் வரை ஒரு மின்சுற்று