521
reactive load: (மின்.) எதிர்வினை மின்சுமை: மின்விசை ஆதாரத்தின் மின்னோட்டத்தைச் செலுத்தும் அழுத்தத்திலிருந்து குறையுமாறு செய்கிற மின்சுமை. தூண்டு எதிர் வினைப்பு கொண்ட மின்சுமை
reactive power : (மின்.) எதிர் வினைப்பு மின்விசை : ஒரு மின் சுற்றுவழியின் எதிர்வினைப்பு அமைப்பின் பயன்படுத்திக் கொள்ளும் மின்விசை
ream: ரீம்: 20 தாள்மடி, 480 தாள்கள் அடங்கிய கட்டு, கழிவுச் சரியீடு சேர்த்து 500 தாள்கள் அடங்கிய கட்டு
reamer : (உலோ.) துளைப் பெருக்கு கருவி : உலோகத்தில் ஏற்கெனவே வெட்டப்பட்டுள்ள துளையைப் பெரிதாக்குவதற்கான ஒரு கருவி
rear axle : (தானி.) பின் இருசு: பல்லிணைகள், இருசுச் சுழல் தண்டுகள், இயங்குபொறி ஆகியவற்றையும் தாங்கிகள் பட்டை வளையங்கள் போன்ற இயக்குவதற்குத் தேவையான துணை உறுப்புகளையும் கொண்ட பின் இருசு
Reaumur thermometer: (இயற்.) ரோமர் வெப்பமானி : ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் பயன்படுத்தப்படும் ஒரு வெப்பமானி. இதில் பனிக்கட்டியின் உருகுநிலை 0°, நீரின் கொதிநிலை 80°
receiver : (மின்.)செவிக்குழல் தொலைபேசிச் செய்தியைக் கேட்பதற்கு காதருகே வைத்துக் கேட்கப்படும் கருவிஇ (2) ஒலி-ஒலிப்பெட்டி- அலை பரப்புகளை ஒலியாகவோ ஒளியாகவோ மாற்றுவதற்கான அமைவு
receptacle : (மின்.) கொள்கலம் : வெண்சுடர் மின் விளக்கினைப் பொருத்துவதற்கான சுவர்க் குதை குழி
reciprocating : (எந். ) எதிரெதிர் இயக்கம் : முன்னும் பின்னும் மாறி மாறி இயங்குதல்
recondition : மறு சீரமைப்பு : பயன்படுத்தத் தக்கவாறு பழுது பார்த்துச் சீரமைவு செய்தல்
reconnaissance : முன்னாய்வு : நில அளவைப் பணியில் நில அளவைப் பணியைத் தொடங்குவதற்கு முன்பு நடத்தப்படும் முன்னீடான ஆய்வு
recorder : பதிவு கருவி: மின்னியல் சைகைகளை அல்லது ஒரு கருவியின் அல்லது சாதனத்தின் மாறிவரும் இயற்பியல் அல்லது மின்னியல் நிலைமைகளைப் பதிவு செய்வதற்கான ஒரு கருவி. எடுத்துக்காட்டாக, ஒரு நாடா ஒலிப்பதிவு கருவியானது ஒலி பெருக்கி வழியாக நுழையும் ஒலியை மின்னியல் சைகைகளாக மாற்றி, ஒரு காந்த நாடாவில் பதிவு செய்து வைக்கிறது
recording thermometer: பதிவு வெப்பமானி: வெப்பமாறுதல்களை நிரந்தரமாகப் பதிவு செய்து கொள்ளும் ஒரு வெப்பழானி. இது ஒரு காகிதப் பட்டையில் அல்லது சுருளில் தானாகவே வெப்பநிலையைப் பதிவு செய்து கொள்ளும்
recrystallization : (உலோ.) மறு படிகமாக்கல்: கெட்டியாக்கப்பட்ட உலோகத்தைக் கட்டுப்படுத்தி ஆற வைத்தல் மூலமாகவோ நன்கு சூடாக்கி மெல்ல ஆறவிடுவதன்