பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/596

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

594

அல்லது மின் கம்பிவடத்தின் முழு எடையையும் இழுவிசையையும் தாங்குவதற்கு உயர்ந்த அளவு மின்காப்பும் விறைப்பாற்றலும் கொண்ட ஒரு மின்காப்பி

strake : (உலோவே) நீர்வரிப் பட்டி : கப்பலின் முன் பகுதியிலிருந்து பின் பகுதி வரையுள்ள தொடர்ச்சியான பலகை அல்லது தகட்டு அடைப்பு

stranded conductor : (மின்) சர மின்கடத்தி': கெட்டியான கம்பிகளின் பல சரங்களை ஒன்றாகச் சேர்த்து முறுக்கிய மின்கடத்தி, இது சாதாரணமாக 7,19,37 சரங்கள் கொண்டதாக இருக்கும்

stranded wires : (மின் ) சரக் கம்பி ; பின்னிய அல்லது முறுக்கிய பல சிறு கம்பி களைக் கொண்ட கம்பிச்சரடு அல்லது கம்பி வடம்

strap work : வார் ஒப்பனை. வார்முடைவுப் போலி அணி ஒப்பனை

strata : படுகைகள் : இயற்கையான அல்லது செயற்கையான நிலஅடுக்குப் படுகைகள்

stratification : அடுக்கமைவு : அடுக்கடுக்கான படுகைகளாக அமைத்தல்

stratiform : அடுக்கியல் படிவு : படுகையடுக்குகளாக உருவாகிற வடிவம்

stratigraphy: அடுக்கியல் ஆய்வு: அடுக்கியற் படிவாக்கக் கூறுகளின் தொகுதி பற்றிய ஆய்வு

stratocruiser : மீவளி மண்டல வானூர்தி : காற்று மண்டலத்தின் மேன்முகட்டுத் தளத்திற்குச் செல்லத்தக்க விமானம்

stratosphere : மீவளி மண்டலம் : தட்பவெப்ப நிலை உயரத்திற்கேற்ப மாறாமல் நிலையாக இருக்கும் காற்று மண்டலத்தின் ஏழு கல்லுயரத்திற்கு மேற்பட்ட அடுக்கு

Strawboard : வைக்கோல் அட்டை : முற்றிலும் வைக்கோல் கூழினாலான அட்டை

stray field . (மின்) சிதறல் காந்தப்புலம்: காந்தப் பாதைக்குப் புறத்தேயுள்ள காந்த விசைக் கோடுகள்

strays : (மின்.) இடைத் தடங்கலொலி : வானொலியில் ஒலிபரப்புடன் தொடர்புடையதாக இல்லாத மின்காந்த உலைவுகள்

stream-anchor : இழுவை நங்கூரம் : கப்பலை நிலம் நோக்கி இழுக்கும் போது பயன்படும் சிறு நங்கூரம்

streamline : (வானூ) இழை வரி: ஒழுகு நீர்மம் பின்பற்றும் இயல்தளக்கோடு

stream line flow : (வானூ) இழைவரிப் பாய்வு : உடற்பகுதியின் அருகிலுள்ளதும், குறுகிய பின்கல அலைவிலுள்ளதும் நீங்கலாக, இழைவரிகள் நேரத்துடன் மாறாதிருக்கிற திரவப் பாய்வு

strength of current : (மின் ) மின்னோட்ட வலிமை : ஒரு மின் சுற்று வழியாகப் பாயும் மின்னோட்டத்தின் ஆம்பியர் எண்ணிக்கை. இது நீர்க் குழாயில் ஒரு நிமிடத்தில் பாயும் நீரின் காலன் அளவு போன்றது

strength of materials : (பொறி) இயற்பொருள் வலிமை : பொருள்களின் வடிவிலும், வடிவளவுகளில் மாறுதல் உண்டாக்குகிற ஆற்றல்