பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/620

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

618

thermal efficiency : (தானி) வெப்பத் திறம்பாடு: ஓர் எஞ்சினின் விசை உற்பத்தி அளவுக்கும், விசை உற்பத்தி செய்யப்பயன்படுத் தப்படும் எரிபொருளிலுள்ள ஆற்றலுக்கு மிடையிலான தொடர்பு

thermal heating : வெப்பச் சூடாக்கம் : வாயுமண்டலத்தின் வழியாக ஒலியினும் வேகமாகப் பயணம் செய்யும்போது உண்டாகும் வளி இயக்க வெப்பம்

thermal jet engine : (வானூ) வெப்ப ஜெட் என்ஜின் : பின்புறமான பீச்சுக்கு வாயுக்களை விரிவாக்க வெப்பத்தைப் பயன்படுத்தும் ஒரு ஜெட் ஏன்ஜின். இது விமான ஜெட் என்ஜினின் வழக்கமான வடிவம்

thermal reaction : (குழை) வெப்ப விளைவு : திடவடிவைப் பெறுகையில் வேதியியல் விளைவால் பிளாஸ்டிக்கில் தோன்றும் வெப்பம்

thermal runaway : (மின்) மீள்விளைவு வெப்ப உயர்வு : ஒரு மின் பெருக்கியில் (டிரான்சிஸ்டர்) திரள் மின்னோட்டத்திலும், இணைப்பு வெப்ப நிலையில் ஏற்படும் மீள்விளைவு உயர்வு

thermal unit : (இயற்) வெப்ப அலகு : வெப்பத்தைக் கணக்கிட அல்லது ஒப்பிடுவதற்குத் தேர்ந்தெடுக்கப்படும் அலகு. இதர அளவுகளின் ஒப்பிடுவதற்கான நிர்ணய அலகு

thermionic emission : (மின்) கதிரியக்க வெப்ப உமிழ்வு : சூடாக்கிய எதிர்மின் முனையிலிருந்து எலெக்ட்ரான்கள் உமிழப்படுதல்

thermionics : (மின்) கதிரியக்க வெப்பவியல் : வெப்பத்தின் மூலம் எலெக்ட்ரான்கள் உமிழப்படுவதைப் பற்றி ஆராயும் அறிவியல் துறை

thermistor : (மின்) வெப்பத் தடை மின்கலம் : எதிர்த்தாக்கள வில் வெப்பநிலை பெறத்தக்க தாக்கப்பட்ட, அதனால், வெப்பத்தடையுடைய தாக்கப்பட்ட மின் கலம்

thermit : (பொறி.) மீவெப் பூட்டி : அலுமினியப் பொடியும் இரும்பு, குரோமியம் அல்லது மாங்கனீஸ் ஆக்சைடும் கலந்த பொடி. தெர்மிட் (பொடி வைத்துப் பற்ற வைத்தல்) முறையில் பற்றவைப்பதற்கு இது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது

thermit (pressure) welding: மீவெப்ப அழுத்தமுறை பற்றவைப்பு: அழுத்த முறையில் பற்றவைக்கும் இதில் தெர்மிட் விளைவு உண் டாக்கும் திரவப் பொருட்கள் மூலம் வெப்பம் பெறப்படுகிறது

thermit welding : மீவெப்பூட்டி பற்றவைப்பு: அழுத்தம் பயன்படுத்தப்படாத (உருகு)பற்றவைப்பு முறை.இதில் தெர்மிட் விளைவினால் உருகும் உருக்கிலிருந்து வெப்பம் பெறப்படுகிறது. மேற்படி விளைவின்போது உருக்கு உருகி அதுவே வெடிப்புகளை. கீறல்களை நிரப்பப் பயன்படுகிறது

thermo-couple :(மின்) வெப்ப மின்னாக்கி இது ஒருவகை மின்னாக்கி. இரு உலோகங்களால் ஆன தண்டுகள் அல்லது வயர்களை ஒன்றாகப் பற்ற வைத்த பின்னர் இவ்விதம் இணைந்த பகுதியைச் சூடேற்றினால் தண்டு அல்லது வயர்களின் மறுமுனையில் மின்சாரம் தோன்றும். மிகுந்த வெப்பத்கை அளிக்கும் அதிவெப்பமானிகளில் இது பயன்படுத்தப்படுகிறது

thermocouple meter : (மின்) இணை மாழை வெப்ப மானி : ஒரே மாதிரியாக இல்லாத இரு உலோ