பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/647

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
645

பிரசரையும் அத்துடன் சுழலியை இயக்கப் பயன்படுகிறது. அநேக சமயங்களில் இது 'டர்போராப்' என்றும் குறிப்பிடப்படுகிறது

turbulent flow : (வானூ) கொந்தளிப்பான ஓட்டம் : நீர்ம் ஒட்டத்தில் எந்த குறிப்பிட்ட இடத்திலும் வேகத்தின் அளவும், திசையும் நேரத்துக்கு நேரம் விரைவாக மாறிக்கொண்டே இருக்கின்ற நிலை

turf or peat: டர்ப் அல்லது பீட்

turn - and - bank Indicator : (வானூ.) திருப்பு சாய்வுமானி : விமானம் எந்த அளவுக்குத் திரும்பு கிறது என்பதையும் எந்த அள்வுக்குத் சாய்ந்து செல்கிறது என்பதையும் காட்டுவதற்கு ஒரே உறைக்குள் அமைந்துள்ள கருவி

turn buckle : (எந்) திருப்பு பிணைப்பு : இரு தண்டுகளை ஒன்றோடு ஒன்று திருகி இணைப்பதற்கு புரி கொண்ட இணைப்பு

turned sort ; (அச்சு) திரும்பிய எழுத்து : அச்சுக் கோக்கும்போது வேண்டுமென்றே மேல் பகுதி அல்லது முகப்புப்பகுதி கீழ் நோக்கி இருக்கும் வகையில் அமைக்கப்படுவது. இதனால் பிரதி எடுக்கும் போது அடிப்பகுதி மேல் நோக்கி இருப்பதால் கருப்பாக விழும். உரிய எழுத்து இல்லாத நிலையில் அந்த இடத்தில் உரிய எழுத்தைப் பின்னர் அமைக்க வேண்டும் என்று குறிப்பதற்காக இவ்விதம் தலைகுப்புற வேறு எழுத்து வைக்கப்படுகிறது

turning gouge : (மர.வே.) திருப்பு செதுக்குளி: கடைசல் எந்திரத்தில் மரக்கட்டைகளை சாய்வான முனை கொண்ட செதுக்குளியைப் பயன்படுத்தி மரத்தைச் செலுத்தி எடுப்பது. இவ்வித செதுக்குளி முனையின் அகலம். .6 முதல் 3 8செ.மீ. வரை இருக்கும்

turning machine : வளைப்பு எந்திரம் : ஒரு உருளையின் விளிம்பை வெளிப்புறமாக உள்ளே கம்பி அமைக்கிற வளையம் வளைத்து மடிக்கும் எந்திரம். வாளி அல்லது புனலின் விளிம்பு போன்று அமைக்கவல்லது

turn meter ; (வானூ) திரும்பு மீட்டர் ; விமானம் ஏதாவது ஒரு பக்கம் திரும்புகையில் அவ்விதம் திரும்புகிற விகிதம் நிர்ணயிக்கப்பட்ட அச்சிலிருந்து எந்த அளவில் உள்ளது என்பதைக் காட்டுகிற கருவி

turmeric: (வேதி.) மஞ்சள்: சீனா, கிழக்கிந்தியா மற்றும் பல வெப்ப மண்டல நாடுகளில் விளையும் பயிரிலிருந்து பெறப்படுவது. மஞ்சள் தாள் தயாரிப்புக்கு இது மஞ்சள் சாயப்பொருளாகப் பயன்படுகிறது. காரப் பொருள்களை சோதிப்பதற்கு இத்தாளைப் பயன் படுத்தும்போது மஞ்சள் தாள் பழுப்பு நிறமாக மாறும். மருத்துவம், உணவுப் பாருட்களுக்கு, நிறம் ஏற்றவும், துணிகளுக்குச் சாயமேற்றவும் மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது

turns ratio (மின்) சுழற்சி விகிதம்: ஒரு மின்மாற்றியின் அடிப்படைச் சுருணையின் சுழற்சிகளின் எண்ணிக்கைக்கும், துணைச் சுருணையின் சுழற்சிகளின் எண்ணிக்கைக்கு மிடையிலான விகிதம்

turpentine: (வண்) கற்பூரத் தைலம்: விரைந்து ஆவியாகக் கூடிய நிறமற்ற திரவம். ஒரு வகைத் தனி நெடியும் சுவையும் உடையது. தேவதாரு மரங்களிலிருந்து கிடைக்கும் பிசின ரக்கு