பக்கம்:அறிவியல் அகராதி.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ger

183

gla


சுரப்பி மிகுதியாகச் சுரப்பதால் உண்டாகும் அதிக வளர்ச்சி. இது ஒரு குறைநோய். (உயி)

gill - செவுள்: மீன்களின் மூச்கறுப்பு (உயி)

girafe- ஒட்டைச்சிவிங்கி: விலங்குகளிலேயே மிக உயரமானது. 7 மீட்டர் உயரம். செம்மஞ்சள் நிறம். தோலில் கறுப்புப் புள்ளிகள் உண்டு. கழுத்தும் முன் கால்களும நீண்டவை. அசைபோடுவது. ஆப்பிரிக்காவில் வாழ்வது. (உயி)

gizzard - அரைவைப் பை: இரண்டாம் இரைப்பை உணவுவழியின் தசைப்பகுதி வளைய உடலிகள், பறவைகள், சில கணுக்காலிகள் ஆகியவற்றில் காணப்படுவது. உட்கொண்ட உணவை அரைக்கப் பயன்படுவது. (உயி)

'glacier - பனியாறு: நகர்கின்ற நிறைபனியே பணியாறு. நீரைப்போல் பணியாறு விரைவாக நகர்வதில்லை. இது மூன்று வகைப்படும். 1. கண்டப் பணி யாறு. 2. பள்ளத்தாக்குப் பணி யாறு. 3. மலையடிப்பணியாறு. (பு:அறி)

gland - சுரப்பி: சுரக்கும் உறுப்பு. தாவரங்கள், விலங்குகள் ஆகிய வற்றில் காணப்படுவது விலங்கு களில் சுரப்பிக்கு நாளம் இருந்தால் நாளமுள்ள சுரப்பி (உமிழ் நீர்ச்சுரப்பி) என்றும் நாளம் இல்லையெனில் நாளமில்லாச் சுரப்பி (தைராய்டு என்றும் பெயர் பெறும். (உயி)

glass - கண்ணாடி: படிகமல்லாத திண்மம். மீக்குளிர்ச்சியடைந்த நீர்மங்களே கண்ணாடிகள். சோடா கண்ணாடி சீசாக்கள் செய்யவும். போரோ சிலிகேட் கண்ணாடிகள் சமையல் பாண்டங்கள், ஆய்கருவிகள் ஆகியவை செய்யவும் பயன்படுதல். (வேதி)

glasswool-கண்ணாடிக் கம்பளம்: பஞ்சுக் கம்பளத்தைப் போன்ற செயற்கைப் பொருள். ஆனால் மிக நுண்ணிய கண்ணாடி இழையாலானது. அரிக்குத் தன்மையுள்ள நீர்மங்களை உறிஞ்சவும் வடிகட்டவும் பயன்படுதல். (இய)

Glauber's salt - கிலாபர் உப்பு: படிகச் சோடியச் சல்பேட்டு. (வேதி)

GLC, gas liquid chromatography - ஜி.எல்.சி. வளிநீர்ம நிறப் பகுப்பியல்: ஆவியாகக் கூடிய பொருள்களின் அரிய கலவையின் பகுதிகளைப் பகுத்துப் பார்க்கும் மிக நுண்ணிய முறை. (வேதி)

glenoid cavity - சுழல்குழி: தோள் பட்டையிலுள்ள கிண்ண வடிவக்குழிவு. இதில் மேற்கை எலும்பின் தலை சுழலும், பா. acetabulum. (உயி)

glochidium - உதட்டிளரி: நன்னீர்ச் சிப்பிவகை மட்டியின் (மசல்) இளம் உதட்டு உயிரி.

glomerulus - குழலிமுடிச்சு: சிறு நீரகப் புறணியில் அமைந்துள்ள சிறிய தந்துகி முடிச்சு. இதனைப்