பக்கம்:அறிவியல் அகராதி.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

mus

279

mut


கள் வட்டமாகவும், குறுக்காகவும் அமைந்துள்ளன. இவை இரைப்பையின் அடிப்பகுதி. கழிவாய், கருவிழிப்படலம் முதலிய பகுதிகளில் உள்ளன. குறுக்கு நார்கள் சுருங்கும்போது, இவற்றின் துளை விரிந்தும் வட்ட நார்கள் சுருங்கும்போது துளை சுருங்கியும் கொடுக்கும். எடுத்துக்காட்டாகக் கண்மணி சுருங்கி விரிவதைக் கருவிழிப்படலத் தசை கட்டுப்படுத்துகிறது. (உயி)

muscular dystrophy-தசைநலிவு; வைட்டமின் (உயிரியன்) ஈ குறைவதால் விலங்குகளின் தசையின் இயக்கம் குலைதல். (உயி)

mushroom - காளான்: உண்ணக்கூடிய பூஞ்சை நாய்க்குடையின் சிதல்தாங்கி, இது குடைவடி வத்தில் இருக்கும். நுண் பூஞ்சிழைகளின் (ஹைபே) போலப் பஞ்சுத்திசுவிலானது. காய்கறியாகும். ஒயின் உண்டாக்கவும் பயன்படுவது.(உயி)

music - இசை: ஒழுங்கானதும் சீரானதுமான அதிர்வுகளால் உண்டாகும் ஒலி. ஒ. noise (உயி)

music note, characteristics of - இசை ஒலியின் பண்பியல்புகள்: 1. இசைப்பு: அதிர்வெண் அதிகமாகும்பொழுது இசைப்பும் அதிகமாகும். இப்பொழுது ஒருவகைக் கீச்சொலி உண்டாகும். அதிர்வெண் குறையும் பொழுது, இசைப்பும் குறைகிறது. இப்பொழுது கட்டை ஒலி உண்டாகிறது. 2.வலிமை: செவியில்

உண்டாகும் ஒலியின் அளவை வலிமை குறிக்கும் ஒலியலை வீச்சின் இருமடிக்கு வலிமை நேர் வீதத்தில் இருக்கும். கேட்பவருக்கும் ஒலி மூலத்திற்கும் இடை யேயுள்ள தொலைவு இருமடிக்கு எதிர்வீதத்திலிருக்கும். 3.பண்பு: ஒரே அதிர்வெண்ணும் வீச்சுங் கொண்ட இரு இசைக் குறிப்புகளை வேறுபடுத்தி அறியப் பண்பு உதவுகிறது. ஒவ்வொரு பொருளும், ஒரு குறிப்பிட்ட இயல்பான அதிர்வெண்ணுடன், பெருவீச்சில் அதிர்கின்றது. இவ்வதிர்வெண் அப்பொருளின் அடிப்படை அதிர்வெண்ணாகும். அவற்றுடன் அதிர் வெண்ணின் மடங்குகளும் அதிர்வெண்ணுள்ள இதர ஒலிகளும் உண்டாகும். இவை மேற்சுரங்கள் (ஓவர் டோன்ஸ்) எனப்படும். இவற்றின் எண்ணிக்கை அதிக மாகும்பொழுது, இசையின் பண்பும் அதிகமாகிறது. (இய)

mustard gas -கடுகு வளி; மிக நச்சுள்ள வளி, போரில் பயன்படுவது.(வேதி)

mutagen - சடுதி மாற்றி: சடுதி மாற்றத்தைத் தூண்டவல்ல காரணி நியூக்கிளியோடைடுகள். கதிர்வீச்சுகள், கார மூலங்கள் ஆகியவற்றுடன் சேர்ந்து வினையாற்றும் வேதிப்பொருள். டிஎன்ஏ சேர்க்கையின்போது இயல்பான கார மூலங்களுக்குப் பதிலாக இவை இருக்கும். (உயி)

mutation - சடுதி மாற்றம்: மூதாதை