பக்கம்:அறிவியல் அகராதி.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ovi

307

oxi


 கருப்படலத்தைப் பிரிக்கும் திசுவிழைகள். (உயி)

oviparous - முட்டையிடும்: (உயி)

oviparity - முட்டையிடுந்தன்மை:(உயி)

oviposition - முட்டையிடும் முறை:(உயி)

ovipositor - முட்டையிடும் அலகு: பெரும்பான்மையான பெண் பூச்சிகளில் வயிற்று முனையில் சிறிய கூர்மையான உறுப்பு இருக்கும். இதன் வழியே முட்டையிடப்படும். (உயி)

ovisac - முட்டைப்பை: முட்டைப்பொதிகை (உயி)

ovoviviparous - உள்பொரி முட்டை: உடலில் பொரியும் முட்டைகளைத் தாய் உண்டாக்கல் (உயி)

ovoviviparity - உள்பொரி முட்டை உண்டாதல்: (உயி)

ovulation - கருமுட்டை உதிர்தல்:(உயி)

ovule - சூல்: பூக்குந் தாவரங்களின் சூல்பையில் காணப்படும் சிறு உறுப்பு. கருவுற்றபின் விதையாக மாறுவது. (உயி)

ovule culture - சூல்வளர்கரைசல்: தகுந்த வளர் ஊடகத்தில் நறுக்கியசூல்களை வளர்த்துத் தாவரப் பெருக்கத்தை ஆராய்தல். (உயி)

ovum - கருமுட்டை: பெண் பாலணு. தாய்முட்டையிலிருந்து (ஊசைட்) குன்றல் பிரிவு மூலம் உண்டாவது (உயி)

owl - ஆந்தை: இரவில் இரை தேடும் பறவை. அகன்ற வட்டமான தலை, தட்டையான முகம். நிலைத்த கண்கள். குறுகிய வளைந்த அலகு. இறகுகள் உண்டு. அலறுவது. கூடு கட்டாதது. (உயி)

oxalic acid - ஆக்சாலிகக் காடி: C2H2O42H2O. நிறமற்ற படிகம். நச்சுள்ளது. நீரில் கரைவது. ஈத்தரில் கரையாதது. மை செய்ய வும் வைக்கோலை வெளுக்கவும் பயன்படுதல். (வேதி)

oxidant - ஆக்சிஜன் (உயிர்வளி) ஏற்றி: எரிதலை உண்டாக்க உயிர் வளியைத் தரும் பொருள். எ-டு. அய்டிரசன் பெராக்சைடு. நீர்ம உயிர்வளி. இவை ஏவுகணை எரிபொருள்கள். (வேதி)

oxidase - ஆக்சிடேஸ்: நொதித் தொகுதி. உயிர்வளி ஏற்றத்தை உயிரணுக்களில் உயர்த்துபவை. (உய)

oxidation - ஆக்சிஜன் (உயிர்வளி) ஏற்றம்: ஒரு மூலக்கூறிலிருந்து நேரயனிகள் நீங்கல் அல்லது எதிரயனிகள் சேர்தல். அல்லது நீர்வளி நீங்கல். உயிர்வாழத் தேவைப்படும் ஒர் அடிப்படைச் செயல். (வேதி)

oxidation - reductin - redox உயிர்வளி (ஆக்சிஜன்) ஏற்ற இறக்கம்: உயிர்வளி ஏற்றத்தையும் ஒடுக்கலையும் குறிப்பது. இரண்டும் பின்னிப் பிணைந்தவை. உயிர்வளி ஏற்றச் செயலின் உடனிகழ்ச்சி ஒடுக்கச் செயல்.