பக்கம்:அறிவியல் அகராதி.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

par

314

par


தோன்றி இனத்தைச் சார்ந்த ஓரணு விலங்கு காலணி வடிவ உயிரி (காலணி வடிவி, நன்னீரில் வாழ்வது. சுருட்டு வடிவ உடல். உடல் முழுவதும் வெளிப்புற முள்ள குற்றிழைகள் இடப் பெயர்ச்சிக்கு உதவுகின்றன. (உயி)

paramylum-மாப்போலி: சேமிப்பு உணவுப் பொருள். ஒளிச்சேர்க்கையால் ஸ்டார்ச்சு போன்ற பொருள் உண்டாக்கப்படுதல். இது பசும்பாசியிலும் பசுமையற்ற பாசியிலும் காணப்படுவது. (உயி)

paraphysis - மலட்டிழை: பாசி, மாசி ஆகியவற்றின் இனப்பெருக்க உறுப்புகளில் காணப்படும் குற்றிழை. கிளைக்காதது. பல அணுக்கள் உள்ளது. (உயி)

parapodium - பக்கக்கால்: பல் கூரிப் புழுக்களின் பக்க ஒட்டு உறுப்புகளில் ஒன்று. தசையாலானது. இணைப்பு இல்லாதது. எ-டு. நீரிஸ் (உயி)

parasite - ஒட்டுண்ணி: புற ஒட்டுண்ணி அல்லது அக ஒட்டுண்ணி, அல்லது ஒம்புயிரில் உறையும் வேற்றக வாழ்வி. இரு உயிர்களுக்கிடையே உள்ள தொடர்பில், ஒன்று நன்மை பெற்று மற்றொன்று தீமை பெறும் வாழ்வு ஒட்டுண்ணி வாழ்வு (பாராசிட்டிசம்) ஆகும். நன்மை பெறுவது ஒட்டுண்ணி. தீமையடைவது ஒம்புயிர். ஒட்டுண்ணிகள், அவற்றின் விளைவுகள் ஆகியவற்றை ஆராயுந்துறை ஒட்டுண்ணி இயல் (பாராசிட்டாலஜி) ஆகும். பா. saprophyte. (உயி)

parasitism - ஒட்டுண்ணி வாழ்வு: பா. parasite. (உயி)

parasympathetic nervous system - துணைப்பரிவு நரம்பு மண்டலம்: தானியங்கு நரம்பு மண்டலத்தின் ஒரு பிரிவு. மற்றொன்று பரிவு நரம்பு மண்டலம். இவை இரண்டும் மைய நரம்பு மண்டலத்தைப் போல் நரம்பணுக்கள், நரம்பிழைகள், நரம்பு முடிச்சுகள் ஆகியவற்றாலானவை.

parathyroid glands - துணை தொண்டைச் சுரப்பிகள்: நான்கு சிறிய முட்டைவடிவச் சுரப்பிகள். தொண்டைச் சுரப்பியில் உள்ளவை. குழாய் இல்லாதவை. (உயி)

paratype - துணைவகை: புதிய வகையை வருணிக்கும்போது, வருணிப்பவரிடமுள்ள வகை. இது முழுவகையோ (ஹோலோ டைப்) ஓரகச் சீர்வகையோ (ஐசோடைப்) அன்று. (உயி)

parazoa - துணைத்தோன்றிகள்: அமைப்பில் அணுப்படி நிலையுள்ள விலங்கு. எ-டு. துளையுடலிகள் (பொரிபெரா), முன் தோன்றிகளுடனும் (புரோட்டா சோவா) நடுத்தோன்றிகளுடனும் (மெட்டோசோவா ஒருமுக நிலை கொண்டது. (உயி)

parenchyma - பஞ்சியம் பஞ்சுத்