பக்கம்:அறிவியல் அகராதி.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

per

320

per


மட்ட வரிசைகளில் ஒன்று. 2. அலைவுநேரம்: ஓர் அலைவின் முழுச்சுற்றுக்கு எடுத்துக்கொள்ளும் நேரம், 3. காலம்: (இய)

periodic motion - காலநிகழ் இயக்கம்: தொடர்ச்சியாகவும் ஒத்த முறையிலும் நிகழும் ஒரு தொகுதியின் இயக்கம், ஊசல் அசைவு (இய)

periodic law- தனிம வரிசை விதி: ஆவர்த்தன விதி. இதனை உருசிய நாட்டு வேதியியல் அறிஞர் மெண்டலீஃப்பு என்பார் 1869இல் வெளியிட்டார். தனிமங்களின் இயற்பண்புகளும் வேதிப்பண்புகளும் அவற்றின் அணு எடைகளுக்கேற்ப வரிசை முறையில் மாற்றமடைகின்றன என்பது விதி. (வேதி)

periodic table - தனிம வரிசை அட்டவணை: தனிம வரிசை விதிப்படி அமைக்கப்பட்ட அட்டவணை. இதில் 9 தொகுதிகள் உள்ளன. தனிமப் பண்புகளை இவ்வட்டவணை நன்கு விளக்குகிறது. கனிம வேதியியல் வளர்ச்சிக்கும் ஆராய்ச்சிக்கும் இது பெரிதும் பயன்படுகிறது. இதன் நீள்வடிவத் தனிம வரிசை அட்டவணை வேதியியலில் ஒரு விவிலிய நூல் ஆகும். (வேதி)

peripods - நடகால்கள்: நண்டு முதலிய விலங்குகளில் பயன்படும் நடக்குங் கால்கள். (உயி)

periosteum- எலும்பியம் : எலும்புகளின் மேற்பரப்பை மூடியுள்ள விறைப்பான நார்ப்படலம் (உயி)

periostracum- எலும்போட்டியம்: மெல்லுடலியின் ஓட்டை மூடி யுள்ள கடினவெளியடுக்கு (உயி)

peripheral nervous system - ஒருங்கு நரம்பு மண்டலம்: நரம்பும் நரம்பு முடிச்சுகளும் சேர்ந்த தொகுதி மைய நரம்பு மண்டலத்திலிருந்து உறுப்பு களுக்கும் உடலின் புறப்பகுதிக்கும் செல்வது. புறநோக்கு நரம்பு மண்டலம் என்றுங் கூறலாம். (உயி)

periscope - சூழ்நோக்கி: ஒளிக் கருவி. ஒரு குழாயில் 45° அளவில் மறிக்கும் பரப்பு ஒன்று மற்றொன்றை நோக்குமாறு அமைக்கப்பட்ட இரு சமதள ஆடி களைக் கொண்ட கருவி, அகழியிலுள்ள போர் வீரர்கள் எதிரியின் நடமாட்டத்தை வேவு பார்க்கவும் நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து எதிரியின் கப்பல் நடமாட்டத்தை அறியவும் பயன்படுகிறது. (இய)

perisperm - சுற்றுத்தசை: சூழ் வழித்தசை. உட்கருவிலிருந்து உண்டாகும் ஊட்டத்திசு, விதை யில் உள்ளது. கேரியோ பைலே சிக் குடும்பத் தாவர விதைகளில் உள்ளது. ஒ. (உயி)

perissodactyla- ஒற்றைவிரலிகள்: பின்காலில் ஒற்றை எண்ணிக்கை விரல்களைக் கொண்ட விலங்குகள். எ-டு, குதிரை. (உயி)

peristalsis - அலைஇயக்கம்: உணவுவழிச் சுவரிலுள்ள தசைகள் உண்டாக்கும் நெளிவியக்கத்-