பக்கம்:அறிவியல் அகராதி.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pro

348

pro



prokaryotes - முன்நல்லுயிரிகள்: படலஞ்சூழா உயிரிகள். குச்சியங்கள் (பாக்டிரியாக்கள்). நீலப்பசும் பாசி முதலிய ஓரணு உயிரிகள் ஒற்றை நிறப்புரி உள்ளவை, இவற்றின் உறுப்பிகளில் (ஆர்கனேல்ஸ்) உட்கருப்படலம் (நியூக்ளியர் மெம்பரின்) இல்லை. இதுவே இவற்றிற்குப் பெயரக்காரணமாய் அமைந்தது. ஒ. eukaryote. (உயி)

promoter - உயர்த்தி: தானே வலுக்குறை ஊக்கியாக உள்ள பொருள். ஆனால் ஏனைய வினையூக்கியின் ஊக்கத்தைப் பெருமளவுக்கு உயர்த்துவது. பா. catalyst. accelerator. (வேதி)

proof-1 மெய்ப்பு: மெய்ப்பித்தல், ஆய்வினால் அல்லது சான்றினால் உறுதிசெய்தல், 2. மயக்கந்தரும் குடியங்களில் எத்தனால் அடக்கத்தின் அளவு. 3. அச்சுப்படி அச்சுப்பிழை திருத்துவதிலுள்ள படி (ப.து.)

prophase - முதனிலை: இழைப் பிரிவின் முதல் நிலை. கதிர் நடுக்கோட்டில் நிறப்புரிகள் அமையும் வரை உள்ள நிலை. பா. mitosis. (உயி)

prop (pillar) root - தூண்வேர்: ஒரு வேற்றிடவேர். மண்ணும் தண்டும் சேருமிடத்தில் உள்ளது. தண்டுக்குக் கூடுதல் தாங்குதல் அளிப்பது. எ-டு ஆலவிழுது. (உயி)

propellants - முன் இயக்கு பொருள்கள்: இயக்கிகள், ஏவுகணை எந்திரம் இயங்கத் தேவையான வேதிப்பொருள்கள். இவை எரிபொருள், எரிய வைக்கும் பொருள் என இருபொருள்களானவை. இவை கெட்டி நிலையிலோ நீர்மநிலையிலோ இருக்கும். அப்டிரசின், அனிலின், பெட்ரோல் முதலியவை உயர் வகை எரிபொருள்கள். உயர் வகை எரிய வைக்கும் பொருள்கள் உயிர்வளி, நைட்ரிகக்காடி முதலியவை ஆகும். இயக்கி = எரிபொருள் + எரிய வைக்கும் பொருள் (உயிர்வளி அல்லது உயிர்வளியுள்ள கூட்டுப்பொருள். (வேதி)

protective coatings - காப்புப் பூச்சுகள்: அரிமானத்தைத் தடுப்பவை. வகை: 1. கனிமப் புறப்பரப்புப் பூச்சு 2. கரிமப் புறப்பரப்புப் பூச்சு. உலோகத்திற்கு அழகூட்டவும் மெருகேற்றவும் பயன்படுதல். (வேதி)

protective resemblance - பாதுகாப்பு ஒற்றுமை: சில விலங்குகள் தங்கள் பகைவர்களிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளச் சூழ்நிலையை ஒத்த நிறத்தைப் பெற்றிருத்தல். எ-டு இடையன் பூச்சி, குச்சிப்பூச்சி. (உயி)

protein - புரதம்: கரி, நீர்வளி, வெடிவளி, உயிர்வளி முதலிய தனிமங்களைக் கொண்ட கரிமச் சேர்மம். அமினோ காடிகளாலானது. முன்கணியத்தின் இன்றியமையாப் பகுதி உயிரை வளர்ப்பது. இறைச்சி, பருப்பு முதலிய