பக்கம்:அறிவியல் அகராதி.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

rad

358

rad


radian - ரேடியன்: அலகுச்சொல். ஆர நீளத்திற்குச் சமமான நீளங்கொண்ட வட்டவில், வட்டமையத்தில் தாங்கும் கோணம். 2π/= ரேடியன்கள் 360°. ரேடியன் π180°. 1 ரேடியன் π57.296° (இய)

radiata - ஆரச்சமச்சீரிகள்: அடிப்படை ஆரச்சமச்சீருடைய விலங்குகள், எ-டு குழிக்குடலிகள், சில கடற்பஞ்சுகள், முட்தோலிகள். (உயி)

radiation - கதிர்வீச்சு: அலையாகவோ துகள்களாகவோ ஆற்றல் செல்லுதல். எ-டு ஒளி வீச்சு ஆல்பா கதிர்கள். பீட்டா கதிர்கள். பா. alpha.(இய)

radiation belts - கதிர்வீச்சு வளையங்கள்: புவியைச் சுற்றியமைந்துள்ள இரு வளையங்கள். பா. Van allen. radiation belts. (இய)

radiator - கதிர்வீச்சழுத்தம்: ஒரு பரப்பின் மீது மின்காந்தக் கதிர் வீச்சு விழும்பொழுது உண்டா கும் அழுத்தம். (இய)

radiator - குளிர்விப்பான்: உந்து (மோட்டார் எந்திரங்களில் இணைக்கப்பட்டிருக்கும் சிறிய தொட்டி போன்ற அமைப்பு. நீர் நிரப்பப்பட்டிருக்கும். சூடேறும் எந்திரத்தைக் குளிர்விக்கப் பயன்படுவது. (இய)

radical. படிமூலி: ஒரு தனி அணு போல் நடக்கும் அணுத் தொகுதி. ஒரு சேர்மத்திலிருந்து மற்றொரு சேர்மத்திற்குச் செல்லும்போது மாறாதிருப்பது. பா. face. (வேதி) 2. வேர்வரு இலை: தரைமட்ட இலையிலிருந்து கொத்தாக இலைகள் மேல் உண்டாதல். பார்ப்பதற்கு நேரடியாக வேரிலிருந்து வருவதுபோல் இருக்கும். எ-டு முள்ளங்கி, கத்தாழை, (உயி)

radicle - முளைவேர்: விதை முளைக் கருவின் பகுதி. விதை முளைக்கும்போது முதல் வேராகத் தரையில் வளர்வது. (உயி)

radio-1. வானொலி: கட்டுப்பாட்டு நிலையங்களிலிருந்து மின்காந்த அலைகளாக வரும் நிகழ்ச்சிகளைப் பெறும் கருவி அல்லது கருவித்தொகுதி. இதில் தொலை வரைவி. தொலைபேசி, தொலைக் காட்சி, ரேடார் ஆகியவை அடங்கும். 2. கதிர் அல்லது கதிர்வீச்சு (இய)

radioactivity - கதிரியக்கம்: சில தனிமங்கள் தாமாகச் சிதைந்து மின்னேற்றக் கதிர்களை வெளி விடுவதற்குக் கதிரியக்கம் என்று பெயர். ரேடியம், தோரியம், யுரேனியம் முதலியவை கதிரியக்கத் தனிமங்கள். இந்நிகழ்ச்சியைக் கண்டறிந்தவர் பெக்கரல். (இய)

radio carbon dating - கதிரியக்கக் கரிக்கணிப்பு: பா. carbon dating. (இய)

radio astronomy - கதிரியல் வானியல்: 1. விண்பொருள்கள் வெளிவிடும் மின்காந்தக் கதிர் வீச்சைப் பெற்றுப் பகுத்து